மத்திய, மாநில அரசு பள்ளிக்கூட பாடப்புத்தகங்களில் மாணவ-மாணவிகளுக்கு
பாலியல் தொல்லை அளிக்கப்படுவதை எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக
அறிவுரைகள் இடம்பெற தேசிய கல்வி கவுன்சில் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதும், இது
தொடர்பாக அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும் அண்மைக்காலமாக அதிகரித்து
வருவது குறித்து குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் மிகுந்த
அதிர்ச்சி அடைந்துள்ளது.
இதையடுத்து அந்த அமைச்சகம் கேட்டுக்கொண்டதின் பேரில் தேசிய கல்வி ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) இயக்குனர் ஹிருஷிகேஷ்
சேனாபதி நேற்று அதிரடியாக சில உத்தரவுகளை பிறப்பித்தார்.
இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய, மாநில அரசு பள்ளிக்கூட பாடப்புத்தகங்களின் கடைசி பக்க அட்டையின்
உட்பக்கத்தில் மாணவ-மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதை எளிதில்
புரிந்து கொள்ளும் விதமாக எது நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் என்பது பற்றிய
அறிவுரைகள் சம்பந்தப்பட்ட மாநில மொழிகளில் கட்டாயம் இடம்பெற வேண்டும்.
இதுபோன்ற நேரங்களில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது குறித்தும் இடம்
பெற்றிருக்கவேண்டும். இதுபற்றி ஆசிரியர்களும், பெற்றோரும்
மாணவ-மாணவிகளுக்கு எடுத்து கூறவேண்டும். பாலியல் தொல்லை குறித்து
மாணவ-மாணவிகளோ, பெற்றோரோ புகார் தெரிவிக்க அல்லது கவுன்சிலிங் பெற உதவி
தொலைபேசி எண்களும் அந்த பக்கத்தில் இடம்பெற வேண்டும். பாலியல் தொல்லையில்
இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்கள்
குறித்தும் அதில் சுருக்கமாக தெரிவிக்கப்படவேண்டியது அவசியம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...