ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சான்றிதழ்களில் போலியை கண்டுபிடிக்க, அரசு தேர்வுத்துறை புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும், ௪௫ ஆயிரம் பள்ளிகளில், ௩.௫௦ லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். ௧௦ ஆண்டுகளுக்கு முன், பலர் போலி சான்றிதழ்களை கொடுத்து, பணியில் சேர்ந்ததை, பள்ளிக் கல்வித் துறை, ஓராண்டுக்கு முன் கண்டுபிடித்தது.
இதையடுத்து, பணியில் உள்ளோர், புதிதாக சேரும் ஆசிரியர்கள், ஊழியர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும் பணி துவங்கியது. மாவட்ட அலுவலகங்களில் இருந்து, சான்றிதழ் நகல்கள், சென்னையில் உள்ள தேர்வுத்துறைக்கு அனுப்பப்படும். தேர்வுத்துறை அதிகாரிகள், அதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து, சான்றிதழ் வழங்குவர்.
இந்த நடைமுறையால், லட்சக்கணக்கான ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதில் இழுபறி நிலை உள்ளது. கால தாமதத்தை தவிர்க்கும் வகையில், சான்றிதழ்களின் விபரங்கள், ஆன்லைனில் தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதற்கான பயன்பாட்டாளர் அடையாள எண் மற்றும் ரகசிய குறியீடு எண், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இந்த குறியீட்டை பயன்படுத்தி, மாவட்ட அதிகாரிகள் அலுவலகத்திலேயே, சான்றிதழ்களை சரிபார்த்து கொள்ளலாம் என, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவுறுத்தி உள்ளார்.
இந்த புதிய முறையால், மாவட்ட வாரியாக, போலி சான்றிதழ் காட்டி பணிக்கு வந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு
உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...