ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால், பாடங்கள் நடத்தி
முடிக்கப்படவில்லை. இந் நிலையில், காலாண்டு தேர்வு இன்று துவங்குவதால்,
மாணவர்கள் பீதி அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும், அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு
ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர், ௭ முதல், காலவரையற்ற போராட்டம்
நடந்து வருகிறது.
ஆசிரியர்கள், 'ஸ்டிரைக்', அறிவிப்பு, பாடங்கள் ,பாக்கி - இன்று தேர்வு, துவங்குவதால் ,மாணவர் ,அச்சம்
வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை
கிளை, சமீபத்தில், தடை விதித்தது. இதை, சட்டப்படி எதிர்கொள்வதாக
அறிவித்துள்ள, ஜாக்டோ - ஜியோ, இன்று முதல் போராட்டத்தை தொடர்வதாக
தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், இன்று முதல்
காலாண்டு தேர்வு துவங்குகிறது. இதற்கான பாடங்களை, தனியார் பள்ளிகள் ஏற்கனவே
முடித்து விட்டன. ஆனால், அரசு பள்ளிகளில் இன்னும், 25 சதவீத பாடங்கள்
பாக்கி உள்ளன. பட்டதாரி மற்றும்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆகஸ்ட் முதலே, போராட்ட
ஏற்பாடுகளிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டு உள்ளதால், பாடங்கள் முழுமையாக
நடத்தப்படவில்லை.
பாடங்களே நடத்தி முடிக்காத நிலையில், இன்று காலாண்டு தேர்வு
துவங்க உள்ளது. இதற்கான வினாத்தாள்களை, அரசு தேர்வுத்துறை தயாரித்து,
மாவட்ட வாரியாக அனுப்பி உள்ளது. பிளஸ்1க்கு, புதிய விதிகளின்படி,
பாடத்துக்கு, 100 மதிப்பெண் வீதம், வினாத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது.
காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைவானால், பெற்றோர்கள் வருத்தப்படுவர் என்ற,
அச்சத்தில் மாணவர்கள் உள்ளனர்.
பிளஸ் 1 வகுப்புக்கு புதிய வினாத்தாள்
மத்திய அரசு நடத்தும், 'நீட், ஜே.இ.இ.,' போன்ற நுழைவு
தேர்வுகளில், தமிழக மாணவர்களால் ஜொலிக்க முடியவில்லை. அதற்கு, பள்ளிகளில்,
பிளஸ் ௨வுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்ததும், பிளஸ் ௧ பாடத்தை
நடத்தாமல் விட்டதுமே காரணம் என, தெரியவந்தது. அதனால், பிளஸ் 1 வகுப்புக்கு,
இந்த ஆண்டு முதல், பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரனின் தலைமையிலான குழுவினர்,
இதற்காக புதிய விதிகளை உருவாக்கினர். இந்தவிதிகளின்படி, பிளஸ் 1
வகுப்புக்கு, பாட வாரியாக, தலா, 100 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதன் அடிப்படையில், இன்று முதன்முதலாக, காலாண்டு தேர்வு
துவங்குகிறது.தேர்வு நேரமானது, மூன்று மணி என்பதிலிருந்து, 2:30 மணி நேரமாக
குறைக்க பட்டு உள்ளது. தமிழ், ஆங்கிலம்ஆகிய மொழி
பாடங்களுக்கு, தலா 2 தாள்களுக்கு தேர்வு நடத்தப்படும்.
ஒவ்வொரு தாளுக்கும், தலா, 90 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் தயாரிக்க
படுகிறது. 10 மதிப்பெண் அக மதிப்பீடாக வழங்கப்படும்.
தேர்வு கண்காணிப்பில் சத்துணவு பணியாளர்கள்?
பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள், காலவரையற்ற வேலை நிறுத்த
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, பாடம்
எடுக்கும் முதுநிலை ஆசிரியர்கள், ௧௦ம் வகுப்புக்கு பாடம் நடத்தும்,
பட்டதாரி ஆசிரியர்களில் பெரும்பாலானோர், போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஆசிரியர்கள் பற்றா குறையால், சத்துணவு அமைப் பாளர்கள் மற்றும்
தற்காலிக ஆசிரியர்கள், தேர்வு கண் காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படலாம் என,
தெரிகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...