கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிர்வது நின்று, அடர்த்தியாக வளரும். மேலும் தலை குளிச்சியாகும்.
செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராமல் கூந்தல் கருமையாக வளரும்
முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது
சோயா விதையை தினந்தோறும் அரைத்து தேய்த்து வந்தால் சொட்டைத் தலையில் முடி வளரும்.
முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிய்யக்காய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
வாரம் ஒரு முறையாவது முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து வரவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும்.
சின்ன வெங்காயத்தை செம்பரத்தி பூவுடன் அரைத்து தேய்த்துவர சொட்டைத் தலையில் முடி வளரும்.
பூசணி கொடியின் கொழுந்து இலைகளை எடுத்து நன்கு கசக்கி சாறு எடுத்து அந்த சாற்றை முடி விழுந்த இடங்களில் தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...