நீட்' தேர்வு போராட்டத்தை கட்டுப்படுத்த, கல்லுாரிகளுக்கு விடுமுறை விட,
உயர்கல்வித் துறை உத்தரவிட்டுஉள்ளது. தமிழகத்தில், 'நீட்' தேர்வுக்கு
விலக்கு கேட்டு, சில அமைப்புகள், மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தி
வருகின்றன.
அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளில், ஆங்காங்கே
போராட்டம் நடக்கிறது. சென்னையில் மாணவர்கள், தொடர் போராட்டத்தில்
ஈடுபட்டதால், புதுக் கல்லுாரி மற்றும் அம்பேத்கர் சட்டக் கல்லுாரிக்கு,
விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. போராட்டத்தை கட்டுப்படுத்தவும்,
மாணவர்களின் பாதுகாப்பு கருதியும், தேவைப்படும் இடங்களில் விடுமுறை
அறிவிக்கலாம் என, உயர்கல்வித் துறை அனுமதி வழங்கி உள்ளது. இது குறித்து,
மண்டல கல்லுாரி இணை இயக்குனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து,
கல்லுாரிமுதல்வர்களே முடிவு எடுக்கலாம் என, அறிவுறுத் தப்பட்டு உள்ளது.
பள்ளிகளில், மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடாமல் தடுக்க, ஆசிரியர்கள் உரிய
நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களில் ஒரு தரப்பினர், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வரும் நிலையில், மாணவர்களின் போராட்டமும் சேர்ந்ததால், கல்வித் துறை அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுஉள்ளது. வரும் திங்களன்று, மீண்டும், பள்ளி, கல்லுாரி கள் இயங்கும் சூழலை ஏற்படுத்த, தலைமை ஆசிரியர்கள், கல்லுாரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...