அரசு பள்ளிகளில் பணியாற்றும், 15 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், 22ம் தேதி
வரை விடுப்பு இன்றி, தினமும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள், காலவரையற்ற வேலைநிறுத்த
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால், தற்காலிக ஆசிரியர்கள், பெற்றோர் -
ஆசிரியர் கழக ஆசிரியர்கள் மற்றும் பி.எட்., மாணவர்களை பயன்
படுத்தி, பள்ளிகளில் பாடம் நடத்தப்படுகிறது. எனவே, தற்காலிக பணியில் உள்ள,
15 ஆயிரத்து, 500பகுதி நேர ஆசிரியர்கள், செப்., 22 வரை, தினமும் பள்ளிக்கு
வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.வேலை நிறுத்தம் முடியும் வரை, விடுப்பு
எடுக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர்கள், வாரத்திற்கு இரண்டு வகுப்புகள் மட்டுமே நடத்த அனுமதிக்கப்படுவர்.
இப்போது, தினமும் பணிக்கு வர உத்தரவிட்டு உள்ளதால், அவர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.
வாரத்திற்கு 3 அரை நாள் பகுதி நேர ஆசிரியருகளுக்கு தவறாக 2 வகுப்பு கள் என பதிவு செய்யப்பட்டுள்ளது
ReplyDeleteவாரத்திற்கு 3 அரை நாள் பகுதி நேர ஆசிரியருகளுக்கு தவறாக 2 வகுப்பு கள் என பதிவு செய்யப்பட்டுள்ளது
ReplyDeleteஇதற்கெல்லாம் மட்டும் பகுதிநேர ஆசிரியர்கள் தேவை படுகிறார்கள் பணி நிரந்தரம் கேட்டால் மட்டும் கிடையாது...
ReplyDeleteஆறு வருடமாகியும் விடிவு வரவில்லை..
ReplyDeleteஇவா்களுக்கம் சோ்த்ததும் போராட்டம்
ReplyDeleteதினமும் பணிக்கு வர உத்தரவிட்டு உள்ளதால், அவர்கள் உற்சாகமடைந்து உள்ளனர் என்று அவர்கள் உங்களிடம் கூறினார்களா ? வாரத்திற்கு 3 அரை நாள் சம்பளம் கொடுத்து விட்டு வேலை மட்டும் முழுமாதம் செய்ய வேண்டுமா ?
ReplyDeleteவாரத்திற்கு 3 அரை நாள் வேலை செய்து விட்டு மீதி நாள் சும்மா இருக்க முடியுமா ? அதணால் வேறு இடங்களில் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்கிறோம். இப்போது அதற்கும் வேட்டு வைக்கிறார்கள். ஓரு மனசாட்சி வேண்டாம் ?
ReplyDeleteWhere is order copy?
ReplyDelete