நீட் தேர்வின் காரணமாக மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.
இதன்
காரணமாக தற்பொழுது தமிழகம் முழுவதும் 'நீட்' தேர்வுக்கு எதிராக மாணவர்கள்
மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும் தொடர் போராட்டங்களை நடத்தி
வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் 'நீட்' தேர்வுக்கு எதிரான போராட்டங்களை அனுமதிக்க கூடாது என்று கோரி வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் பொது நல வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த மனுவானது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அதில், தமிழகத்தில் 'நீட்' தேர்வுக்கு எதிராக யாரும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த அனுமதி இல்லை. சாலை மறியல், கடை அடைப்பு உட்பட பொதுமக்களை பாதிக்க கூடிய எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டது.
மேலும், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 15-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.
*இந்நிலையில், அமைதியான முறையில் போராடுவது அடிப்படை உரிமை. அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம்*. அந்தப் போராட்டங்களினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது.
இவ்விவகாரத்தின் போது சட்டம்-ஒழுங்கு பாதிப்பு பிரச்னைகள் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட உத்தரவில் தெரிவித்தது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...