தமிழகத்தில்,
10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கான
மையங்கள் அமைப்பதற்காக,
அதுகுறித்த விபரங்களை அனுப்பி வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 தேர்வும் பொதுத்தேர்வாக மாற்றப்பட்டுஉள்ளது.
அதுகுறித்த விபரங்களை அனுப்பி வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 தேர்வும் பொதுத்தேர்வாக மாற்றப்பட்டுஉள்ளது.
கடந்த ஆண்டு வரை, குறிப்பிட்ட அளவு எண்ணிக்கை உள்ள பள்ளிகள் மட்டுமே தேர்வு மையங்களாக இருந்தன. குறைவான எண்ணிக்கை உள்ள மாணவர்கள், அருகில் உள்ள வேறு பள்ளி தேர்வு மையத்துடன் இணைக்கப்படுவது வழக்கம்.
'நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படுவதால், தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்' என, கல்வியமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துஇருந்தார். தற்போது ஒவ்வொரு பள்ளியிலும், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, தேர்வு மையம் உள்ளிட்ட விபரங்களை சேகரித்து அனுப்பி வைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மாணவர்களின் தேர்வு நேர அலைக்கழிப்பை குறைக்கும் வாய்ப்பு உருவாகிஉள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...