ஆறாவது ஊதியக்குழவில் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசாணை 23ன்படி
2011லிருந்து வழங்கி வரும் தனி ஊதியம் 750 ஐ 1.1.2006ல் 2800 தர ஊதியம்
பெறுபவர்களுக்கு வழங்காது 1.1.2011 முதல் வழங்குவதால் ஏற்பட்டுள்ள இளையோர்
மூத்தோர் முரண்பாடுகளை களைய முடியாமல் தமிழக கல்வித்துறை திணறி வருகிறது .

ஊதியக்குழவில் வழங்கப்படும் திருத்தம் அனைத்தும் அவ்வூதியக்குழுவின் ஆரம்ப காலம்(1.1.2006) முதல் வழங்காமல் குறிப்பிட்ட தேதியை (1.1.2011)வைத்து ஆசிரியர்களை பிரிவிணைப்படுத்தியதே இதற்கு காரணம் ..
அனைத்து பணப்பலன்களுக்கும் பொருந்தும் தனி ஊதியம் 750ஐ ஆறாவது ஊதியக்குழவின் மையத்திலிருந்து வழங்குவதும் 1.1.2006 லிருந்து 31.12.2010 முடிய 2800தர ஊதியம் பெற்ற சாதாரண இடைநிலை ஆசிரியர்கள் எவருக்கும் எந்த பணப்பலனுக்கும் வழங்காமல் மறுப்பதும் அரசாணை 23 ன் தவறாகும் ...
ஓர் ஆசிரியர் இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியராக அல்லது தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறும்போது எப்படி தனி ஊதியம் கையாளப்பட வேண்டும் என்பதை அரசு தெளிவாக விளக்காமல் போனதாலும் ...தனி ஊதியம் 5200-20800 க்கு மாற்றாக அடிப்படை ஊதியத்திற்கு வழங்கப்பட்டதா ? அல்லது 4200க்காக வழங்கப்பட்டதா ? என்பது பற்றி அரசு தெளிவு படுத்தவில்லை ...
⛔கேட்டதோ 9300-34800 கிடைத்ததோ 750 மட்டும் ....இது எந்த இடத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதே இன்னும் முடிவாக வில்லை ....எப்படி இருப்பினும் இத்தனி ஊதியம் எல்லோருக்கும் 1.1.2006லிருந்து வழங்கப்பட்டு இருக்க வேண்டும் ...வழங்காத காரணத்தால் பணியில் பதவி உயர்வில் மூத்தோர் பல ஆயிரக்கணக்கானோர் குறைவான ஊதியம் பெறும் நிலை தமிழகமெங்கும் உருவாகி உள்ளது .
❇8764 தெளிவுரை பதவி உயர்விற்கு பிறகு தனி ஊதியம் எக்காரணம் கொண்டும் தொடரக்கூடாது என்று கூறியுள்ள நிலையில் ..எல்லோருக்கும் 1.1.2011க்குப்பின் பதவி உயர்விற்கு பிறகு தனி ஊதியம் பதவி உயர்வு பெற்ற பிறகும் தனி ஊதியமாக தொடராமல் அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து இணைத்து தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது ....
⏰ஆறாவது ஊதியக்குழவில் pay in the pay என்றும் grade pay என்றும் ஊதியம் வழங்கும் நிலையில் இத்தனி ஊதியம் 750 இந்த இரு நிலைகளில் எதில் வருகிறது என்பதை தமிழக கல்வித்துறை விளக்காமல் பணியில் மூத்தவருக்கு குறைந்த ஊதியத்தையும் ..பணியில் இளையோருக்கு தனி ஊதியம் 750 பதவி உயர்வில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது தவறானது என தணிக்கை தடைகளை காரணம் காட்டி பிடித்தம் செய்வதும் ஆசிரியர்களிடையே கொந்தளிப்பான சூழலை உருவாக்கி உள்ளது ...
தனி ஊதியத்தை 1.1.2006 முதல் கொடுக்காமல் மறுப்பதும் ..1.1.2011 முதல் பதவி உயர்வில் சேர்த்து கொடுத்ததை எடுப்பதும் பல நீதிமன்ற வழக்குகளுக்கு வித்திட்டு காலத்தையும் பணத்தையும் நிர்வாக குழப்பங்களையும் ஏற்படுத்தும் ..
அரசின் முறையற்ற அரசாணை 23 ஆல் தெளிவற்ற 8764 நிதித்துறை தெளிவுரையால் தமிழக கல்வித்துறையில் 750 பெற்றவரும் பெறாதவரும் அல்லல் படும் சூழல் உருவாகி உள்ளது ..ஐந்தாவது ஊதியக்குழவில் தனி ஊதியம் கையாண்டு வந்த முறையும் .ஆறாவது ஊதியக்குழவின் தனி ஊதியமும் ஒன்றா ? அல்லது எப்படி வேறுபட்டது என கல்வித்துறை விளக்காமல் அதிக ஊதியம் வழங்குவதும் பிறகு பிடுங்கி எடுப்பதும் தேவையற்ற நடவடிக்கைகள் ..
கீழ்நிலை அலுவலக பணியாளர் செய்தது தவறெனில் தமிழகம் முழுதும் தெளிவாக அரசாணைகளை வழங்குதல் அரசின் கடமை ஆகிறது ...அரசின் இத்தகைய ஆசிரியர் விரோத போக்கினால் ஆயிரக்கணக்கான ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்ட மேலும் மேலும் குழப்பமான நடைமுறைகள் தொடர்கிறது ..
ஆறாவது ஊதியக்குழவின் முரண்பாடுகள் களைய ஒரே தகுதி .ஒரே பணி .ஒரே ஊதியம் என்பதை தமிழக அரசும் கல்வித்துறையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும் ...
Why do you put lonely girl sitting very sadly in your home page pls change it put happy mood children...
ReplyDelete