வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை, அதிரடியாக, 74 ரூபாய் உயர்ந்துள்ளது.
இந்தியன் ஆயில், பாரத் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய்
நிறுவனங்கள், வீடு மற்றும் வணிக பயன்பாடு, சமையல் காஸ் சிலிண்டர்களை சப்ளை
செய்கின்றன.
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, மேற்கண்ட சிலிண்டர்கள் விலை, ஒவ்வொரு மாதமும் மாற்றி அமைக்கப்படுகிறது.
அதன்படி, சென்னையில், ஆகஸ்டில், வீட்டு சிலிண்டர் விலை, 533 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று இதன் விலை அதிரடியாக, 74 ரூபாய் உயர்ந்து, 607 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல, வணிக சிலிண்டர் விலை, 115 ரூபாய் அதிகரித்து, 1,052 ரூபாயில் இருந்து, 1,167 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது குறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை மற்றும் அதன் இறக்குமதி செலவினங்கள் அதிகரித்துள்ளன.
'அதனால், உள்நாட்டில், சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இம்மாதம், மானியம் பெற தகுதி உடைய, வீட்டு சிலிண்டர் வாடிக்கையாளர் வங்கி கணக்கில், 131.74 ரூபாய் மானியமாக செலுத்தப்படும்' என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...