விண்வெளியில் 665 நாட்களை கழித்துள்ளார் 57 வயது மதிக்கதக்க பெக்கி விட்சன். இவர் அமெரிக்காவை சேர்ந்தவர்.
அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வகம் அமைத்து, ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆராய்ச்சி பணியில் அமெரிக்காவை சேர்ந்த பெக்கி விட்சன்
பங்கெடுத்துள்ளார். பெக்கி அங்கு 288 நாட்கள் தங்கி பணியாற்றி தற்போது
பூமிக்கு திரும்பியுள்ளார்.
இதற்கு முன்னர் விண்வெளியில் இரண்டு முறை சுமார் 534 நாட்களை
செலவிட்டுள்ளார் விட்சன். இதன் மூலம் தன் வாழ்நாளில் 655 நாட்களை
விண்வெளியில் கழித்துள்ளார் பெக்கி விட்சன்.
இதன் மூலம் உலகின் மிக வயதான விண்வெளிப் பெண் மற்றும் அனுபவம் வாய்ந்த விண்வெளி பெண்மணி என்ற பெருமையையும் விட்சன் பெற்றுள்ளார்.
மேலும், உலக அளவில் அதிக நேரம் விண்வெளியில் செயல்பட்டவர்கள் பட்டியலில்
பெக்கி விட்சன் 8 வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...