Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி: அக். 5-ம் தேதி வரை படைப்புகளை அனுப்பலாம்

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் சார்பாக உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இதில் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்.ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரைபடிக்கும் மாணவர்கள் ‘அண்ட வெளியில் அந்நிய உலகத்தைத் தேடி’ எனும் தலைப்பிலும், 9, 10-ம் வகுப்பு மாணவர்கள் ‘பூமியில் வாழும் சூழலற்றுப் போனால்... அடுத்து என்ன?’ எனும் தலைப்பிலும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் ‘இன்னொரு கிரகத்துக்கு இன்பச் சுற்றுலா போவோமா?’ எனும் தலைப்பிலும் கட்டுரை எழுத வேண்டும்.கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில், மாணவர்களின் சுய கையெழுத்தில் எழுதியிருப்பது அவசியம்.
இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதனை அப்படியே சமர்ப்பித்தால் அவை நிராகரிக்கப்படும்.இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல், ‘ஏ4’ தாளில் கட்டுரை இருப்பது அவசியம். ஒவ்வொறு தாளிலும் ஒரு பக்கம் மட்டுமே எழுதப்பட்டிருக்க வேண்டும். கட்டுரைகள் அக்டோபர் 5-ம் தேதிக்குள், ‘The Administrative officer, IPRC/ISRO, Mahendragiri P.O, Tirunelveli - 627 133'என்ற முகவரி யில் சமர்பிக்கப்பட வேண்டும்.தமிழ், ஆங்கில கட்டுரைகளில் தனித்தனியாக முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 04637-281210 / 283510, 9442140183, 9486692236 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive