அண்ணா பல்கலை உட்பட, ஐந்து உயர் கல்வி நிறுவனங்களில், ௫௦௦ கோடி ரூபாய் செலவில், ' சீமென்ஸ்' நிறுவனம் சார்பில், உயர் தொழில்நுட்ப பயிற்சி
மற்றும் ஆய்வக மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இன்ஜினியரிங் மாணவர்களை,
தொழில்நுட்ப ரீதியாக தரம் உயர்த்த, அண்ணா பல்கலை சார்பில், பல்வேறு
நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன் ஒரு கட்டமாக, ஜெர்மனியைச் சேர்ந்த,
சீமென்ஸ் நிறுவனம், சென்னை அண்ணா பல்கலை மற்றும் தமிழக அரசுடன், ௨௦௧௭
ஜூலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
அதன்படி, அண்ணா பல்கலையின் நேரடி கல்லுாரியான, சென்னை, குரோம்பேட்டை, எம்.ஐ.டி., கல்லுாரியில், சர்வதேச தரத்தில் சீர்மிகு ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படுகின்றன.
இவற்றில், கணினி அறிவியல், தொழில்நுட்பம், இயந்திரவியல், மின்னணுவியல், தகவல் தொடர்பு என, அனைத்து பிரிவுகளுக்கும், தனித்தனி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
இதற்காக, ௫௦௦ கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் அரசு இன்ஜி., கல்லுாரிகள், சேலம் பெரியார் பல்கலை மற்றும் சென்னை, தரமணி மத்திய பாலிடெக்னிக் ஆகியவற்றிலும், ஆய்வகத்துடன் கூடிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான உள்கட்டமைப்பு பணிகள் துவங்கியுள்ளன. இன்னும், நான்கு மாதங்களில் இந்த மையங்கள் திறக்கப்பட்டு, அதில், இன்ஜி., மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும், ஐ.டி.ஐ., மாணவர்களுக்கும், தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இது குறித்து, எம்.ஐ.டி., முதல்வர், ஏ.ராஜதுரை கூறுகையில், ''மூன்று ஆண்டுகளுக்கு, சீமென்ஸ் நிறுவன தொழில்நுட்ப வல்லுனர்களே, தமிழக மாணவர்களுக்கு நேரடி தொழில்நுட்ப பயிற்சி அளிக்க உள்ளனர். ''பின், அண்ணா பல்கலை ஆசிரியர்கள் சிறப்பு பயிற்சி பெற்று, மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்குவர். வரும் நவம்பருக்குள், மையத்தை திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...