சென்னை: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கையில், 3,112
இடங்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு கிடைத்துள்ளதாக, தமிழக
அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கை வெளிப்படையாகவும், ஒளிவு
மறைவின்றியும், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில்
நடக்கிறது.
ஒதுக்கீடு
அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள அரசு
ஒதுக்கீடு இடங்கள், அகில இந்திய கவுன்சிலிங்கில் நிரம்பாத இடங்கள் என,
3,532 இடங்கள் உள்ளன. அதேபோல், பல் மருத்துவம் எனப்படும், பி.டி.எஸ்.,
படிப்பில், 1,201 இடங்கள்
உள்ளன.
இவற்றில், ஒதுக்கீடு செய்யப்பட்ட, 4,546 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,
இடங்களில், 3,112 இடங்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள்
பெற்றுள்ளனர்; 1,,434 இடங்கள், சி.பி.எஸ்.இ., மற்றும் இதர பாடத்திட்டத்தில்
படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களில், பிற மாநில மாணவர்கள் மற்றும் இரட்டை பூர்வீக சான்றிதழ்
பெற்றுள்ளவர்களுக்கு, அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, செய்திகள் பரவி
வருகின்றன. ஜூலை, 30 வரை நடந்த
கவுன்சிலிங்கில், தமிழகத்தைச் சேர்ந்த, 4,090 மாணவர்களுக்கு, இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
மேலும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, 428 வெளிமாநில மாணவர்கள்; பிற
மாநிலத்தைச் சேர்ந்த, 8 - 12 வகுப்பு வரை, தமிழகத்தில் ஐந்தாண்டுகள்
படித்த, 28 மாணவர்கள் என, மொத்தம், 4,546 பேருக்கு, இடங்கள் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளன.
உறுதிமொழி
மேலும், இருப்பிட சான்றிதழ் மற்றும் இதர குறைகள் குறித்து ஆராய, குழு
ஏற்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருப்பிட சான்றிதழ் பெறவில்லை
என, மாணவர்களிடம் உறுதிமொழி சான்றிதழ் வாங்குகிறோம்.
மாணவர்கள் வழங்கிய சான்றிதழ் அனைத்தும், மாவட்ட கலெக்டர்களால், அவற்றின் உண்மை தன்மை சரிபார்க்கப்படும்.
இரட்டை சான்றிதழ்களை தடுக்கும் வகையில், மாணவர்கள் படித்த மாநிலத்தின்
தேர்வு குழுவுக்கு அனுப்பி, அம்மாநிலத்தில் மருத்துவ இடங்கள் பெற்றுள்ளனரா
என்பது கண்டறியப்படும்.
விதிகளை மீறி நடந்திஇருந்தால், மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...