அனைத்து கிராமப்புறக் குடும்பங்களுக்கும் 24 மணி நேர மின்சார வசதி வழங்கும்
திட்டத்தைப் பிரதமர் மோடி அறிவிப்பார் என்று மின்சக்தித்துறை அமைச்சர்
தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் 24 மணி நேர மின்சார வசதி தரும் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார் என்று மின்சக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 25ஆம் தேதி இந்தத்
திட்டத்தை நரேந்திர மோடி அறிவிப்பார் என்று சிங் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 25ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சிந்தனையாளரான பண்டிட் தீன்தயாள் உபத்யாயாவின் பிறந்த நாளாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 22ஆம் தேதியன்று ‘தி இந்தியா பவர் கான்க்லேவ்’ என்ற நிகழ்ச்சியை நெட்வொர்க்18 நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மின்சக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், “செப்டம்பர் 25ஆம் தேதியன்று இன்னொரு புதிய சவால் வரவிருக்கிறது. அனைவருக்கும் 24 மணி நேர மின்சார வசதியை வழங்கும் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்க உள்ளார்” என்று அவர் கூறினார். இந்தத் திட்டம் குறித்து மற்ற விவரங்களை சிங் வெளியிடவில்லை. மேலும் மின்சக்தித் திட்டங்களை தயாரிக்க மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக சிங் தெரிவித்தார். இத்திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டு, நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்படும். இத்திட்டத்துக்கு ‘சவுபாக்யா’ என்று பெயரிடப்பட உள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...