ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில், ௧௫ ஆயிரம் பகுதி நேர
ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இதற்கான விதிகள், வரும், 19ம்
தேதி அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், ௨௦௧௨ல், ௧௬ ஆயிரம்
பேர் பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.தற்போது, ௧௫ ஆயிரம் பேர்
மட்டுமே பணியாற்றுகின்றனர்; மாதம், 7,700 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
இவர்கள், பணிநிரந்தரம் கோரி, பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். ஆனால், பணி நிரந்தரம் செய்ய முடியாது என, அரசு கைவிரித்து விட்டது.
இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு பள்ளி ஆசிரியர்கள்
போராட்டம் நடத்தி வந்த நிலையில், பகுதி நேர ஆசிரியர்கள், பள்ளிகளை
கவனித்து வந்தனர். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, நேற்று ஆசிரியர்கள் போராட்டம்,
தற்காலிகமாக வாபஸ் ஆகி உள்ளது.இதனால், பகுதி நேர ஆசிரியர்கள், மீண்டும்
வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும், பள்ளிக்கு வந்தால் போதும் என,
உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், சிறப்பாசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகளுக்கு, பகுதி நேர ஆசிரியர்களை இடம் மாற்ற, தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து உள்ளது. இதற்கான விதிகள், வரும்,19ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.இதற்கிடையில்,இட மாற்றத்தின் போது, ஆசிரியர்களை நீண்ட துாரத்திற்கு மாற்றக்கூடாது என, ஆசிரியர் சங்கத்தினர் கோரியுள்ளனர்.
உயர்,மேல் நிலைப்பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளில் 100க்கு குறைவாகவும் நடுநிலைப்பள்ளிகளில் 75 க்கும் குறைவாக மாணவர்கள் இருந்தால் ப.நே.ஆசிரியர்கள் மாற்றப்பட வேண்டிய விதிமுறைப்படி மாற்றப்படுகிறார்கள். இதை மிகைப்படுத்தி சொல்ல வேண்டாம்.
ReplyDeleteDeployment?
ReplyDeleteEnter your comment...weekly 3 days only.why are you mentioning 2 days
ReplyDeleteவாரத்திற்கு இரு நாட்களா..????!!!!??? பாடசாலை அட்மின் அறிவுஜீவி போலும்....தெரிந்தால் போடணும்....இல்லைனா சும்மா இருக்கலாம்....கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஒரு குழு அமைத்து பகுதிநேர ஆசிரியர்களின் தேவைகள் பூர்த்திசெய்யப்படும் என்பதாகத்தான் பொதுவெளியில் கூறியிருக்கிறார்.....ஒருவேளை தங்களிடம் தனியே ஏதேனும் கூறியிருப்பாரோ என்னவோ....!!!??பதிவிடும்போது கவனம் தேவை......
ReplyDelete