பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் இன்றைய நாட்களில் வயதை குறைத்து சொல்ல ஆசைப்படுகின்றனர்.
இளமை என்பது ஒரு மந்திர சொல்லாகவே இருந்து வருகிறது. நாம் இளமையாக இருக்கிறோம் என்பதை முதலில் நமக்கு எடுத்துச் சொல்வது நமது முகம்.முகத்தில் சுருக்கம் அல்லது கோடுகள் தோன்றினால் அது நம்மை முதுமையாக காட்டுகிறது. முகத்தின் சதைகள் இறுக்கமாக பின்னப்பட்டிருக்கும் வரை நமது இளமை பாதுகாக்க படுகிறது. சதை நெகிழ்ந்து தளரும் போது சருமம் தொங்கி சுருக்கங்கள் தோன்றுகிறது.
சருமத்தில் இந்த தளர்ச்சி தோன்றுவதற்கு முன் இளமையாக தோன்றும் நமது முகத்தின் அழகை தக்க வைக்க நாம் சில இயற்கை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். 30களின் தொடக்கம் இதன் சரியான தருணமாகும். வாருங்கள் , சருமத்தின் தளர்ச்சியை போக்குவதற்கான இயற்கை தீர்வுகளை பார்ப்போம்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. முட்டை வெள்ளை மாஸ்க் :
முட்டை - 1 (வெள்ளை கரு மட்டும்)
செய்முறை:
ஒரு முழு முட்டையை எடுத்து உடைத்து கொள்ளவும். அதில் மஞ்சள் கருவை தனியாக பிரித்து எடுக்கவும். வெள்ளை கருவை மட்டும் எடுத்து முகத்தில் அப்படியே தடவவும். பின்பு முகத்தை காய விடவும். நன்கு காய்ந்தவுடன் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.
இது எளிய முறையில் சருமத்தில் உள்ள தளர்ச்சியை போக்குவதற்கான ஒரு வழியாகும். முகத்தின் தோலை இறுகச்செய்யும் ஒரு மிக சிறந்த மூல பொருள் முட்டையாகும். இந்த மாஸ்க்கில் வேறு எந்த பொருளையும் சேர்க்காததால் நேரமும் மிச்சம் .
2. முட்டை மற்றும் முல்தானிமிட்டி மாஸ்க்:
முட்டை - 1
முல்தானிமிட்டி - 2 ஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்
க்ளிசரின் - சிறிதளவு
செய்முறை:
ஒரு முட்டையை எடுத்து வெள்ளை கருவை மட்டும் ஒரு கிண்ணத்தில் போடவும். இதனுடன் முல்தானிமிட்டியை சேர்த்து கலக்கவும். சில துளிகள் க்ளிசரின் மற்றும் தேனை இதனுடன் சேர்க்கவும். எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி ஒரு பேஸ்ட் போலாக்கி முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை நன்றாக கழுவவும்.
எண்ணெய் சருமமாக இருந்தால் க்ளிசரின் பயன்படுத்த வேண்டாம். எண்ணெய் சருமமாக இருந்தால் மட்டும் முல்தானிமிட்டியை பயன்படுத்தவும் . இது முகத்தில் உள்ள எண்ணெய்த்தன்மையை குறைக்கும். முகத்தில் உள்ள கோடுகள், கறைகள் போன்றவற்றையும் இது குறைக்கும். வறண்ட சருமமாக இருந்தால் இதனை பயன்படுத்தக்கூடாது.
3. முட்டைகோஸ் மற்றும் அரிசி மாவு:
முட்டைகோஸ் - 2-3 தழைகள்
அரிசி மாவு - 3 ஸ்பூன்
பாதாம் எண்ணெய் - சில துளிகள்
செய்முறை:
முட்டைகோஸை விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் அரிசி மாவு மற்றும் பாதாம் எண்ணெய்யை சேர்த்து கலக்குங்கள். இந்த விழுதை உங்கள் முகத்தில் தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். முட்டைகோஸ் முதிர்ச்சியை தடுக்கும். சரும தளர்ச்சியை போக்கி இறுக்கத்தை கொடுக்கும். பாதாம் எண்ணெய் ஈரப்பதத்தை கொடுத்து புது பொலிவை தரும்.
4. வினிகர் :
ஆப்பிள் சீடர் வினிகர் - 2 ஸ்பூன்
செய்முறை:
வினிகர் பயன்படுத்தி செய்யும் மாஸ்க் சரும சுருக்கத்திற்கு சிறந்த ஒரு தீர்வாகும். 2 கப் தண்ணீருடன் 1 ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை கலக்கவும். இந்த திரவத்தை கொண்டு உங்ககள் முகத்தை நன்றாக கழுவுங்கள். இந்த திரவம் உங்கள் சருமத்தை பொலிவுடான் வைத்து தளர்ச்சியை நீக்கும்.
5. மயோனீஸ் மாஸ்க்:
முட்டை மயோனீஸ் - 2 ஸ்பூன்
செய்முறை:
மயோனீஸ் உங்கள் சரும பொலிவுக்கு ஒரு மிகச் சிறந்த தீர்வாகும். இது இருந்தால் மட்டும் போதுமானது. வேறு எந்த விலை உயர்ந்த க்ரீம்களும் இதன் தீர்வை தர முடியாது. முட்டை மயோனிசை எடுத்து உங்கள் முகத்தில் எல்லா இடங்களிலும் சீரக தடவவும். சிறிது நேரம் கழித்து இந்த மாஸ்க் நன்றாக காய்ந்தவுடன் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். உங்கள் சருமம் சுத்தமாகவும் மென்மையாகவும் இருப்பதை உங்களால் உணர முடியும்.
உங்கள் இளமையை பாதுகாக்க மேலே கூறிய வழிகளை பின்பற்றுங்கள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...