தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4,820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என
மாநில போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
சென்னை பல்லவன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இத்தகவலை
தெரிவித்தார்.
அக்டோபர் 15 முதல் அக்டோபர்17 வரை இந்த சிறப்பு
பேருந்துகள் இயக்கப்படும் என்றார். தினசரி இயக்கப்பட கூடிய 2,275
பேருந்துகளுடன் இந்த சிறப்பு பேருந்துகளும் அக்டோபர் 15 முதல் அக்டோபர்17
வரை இயக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டார். சென்னையின் பல்வேறு முக்கிய
சந்திப்புகளில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் சிறப்பு பேருந்துகளை
இயக்க முடிவு செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். சென்னை கோயம்பேடு,
கே.கே.நகர், தாம்பரம் சானடோரியம், அண்ணா நகர் மேற்கு, பூந்தமல்லி உள்ளிட்ட
பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.
தீபாவளி பண்டிகைக்காக தற்போது வரை 32,204 பேர் முன்பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார். போக்குவரத்து துறை தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேற்கண்ட தகவல்களை தெரிவித்தார். தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 18ம் தேதி புதன்கிழமையன்று வெகு கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...