திருப்பூரைச் சேர்ந்த 12 வயது சிறுவன் தமிழக அரசு அறிவித்துள்ள 104 என்ற
அவசர எண்ணை தொடர்பு கொண்டு தன்னை புளூ வேல் விளையாட்டியிலிருந்து காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளான்.
அவசர எண்ணை தொடர்பு கொண்டு தன்னை புளூ வேல் விளையாட்டியிலிருந்து காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளான்.
புளூ வேல் விளையாட்டு உலகம் முழுவதும் பல உயிர்களை பலி வாங்கியது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் இதனால் தற்கொலை அதிகமாகி வருகிறது. தமிழகத்தில் மட்டும் இதுவரை இரண்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்து மேலும் ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த 12 வயது சிறுவன தமிழக அரசு அறிவித்துள்ள 104 அவசர எண்ணை தொடர்பு கொண்டு தன்னை புளூ வேல் விளையாட்டிலிருந்து காப்பாற்றுமாறு உதவி கேட்டுள்ளான்.
அந்த சிறுவனுக்கு தற்போது இரு மனநல மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறுவன் புளூ வேல் விளையாட தொடங்கி இறுதி கட்டத்தை எட்டியுள்ளான். விளையாட்டில் இறுதிக் கட்டத்தில் தான் பெரும்பாலும் தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும். தன்னை தற்கொலை செய்ய கூறுவதாகவும், மறுத்தால் தனது குடும்பத்தினரை கொலை செய்துவிடுவதாக அந்த விளையாட்டில் இருந்து கட்டளைகள் வருவதாக அந்த சிறுவன் கூறியுள்ளான்.
பலர் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழக்கும் மத்தியில் இந்த 12 வயது சிறுவன் தைரியமக உதவி கேட்டது பாராட்டுக்கு உரியது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...