சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின், சுருக்கெழுத்தர் பணிக்கான
எழுத்து தேர்வு, தென் மாநிலங்களில், சென்னை உட்பட ஆறு நகரங்களில்
நடைபெறுகிறது.
இது குறித்து, பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்தி:சென்னை, மதுரை,
புதுச்சேரி, விசாகப்பட்டினம், குண்டூர், விஜயவாடா, ஐதராபாத் ஆகிய ஆறு
நகரங்களில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணயம் சார்பில், சுருக்கெழுத்தர்
பணிக்கான எழுத்துத் தேர்வு, செப்., 11 முதல், 14 வரை நடைபெறுகிறது. இதில்,
55 ஆயிரத்து, 854 பேர் பங்கேற்கின்றனர். கணினி வழியில் நடைபெறும் இத்தேர்வு
தொடர்பான விபரங்களை, www.sscr.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
அதில், ஹால் டிக்கெட்டையும் பதிவிறக்கம் செய்யலாம். மேலும், விபரங்களுக்கு,
044- - 2825 1139; 94451 95946 உதவி மைய எண்களை, தொடர்பு கொள்ளலாம்
இவ்வாறு அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...