இன்றைக்கு சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விளையாட்டு,
‘புளூ வேல்’. அதாவது, தமிழில் நீல திமிங்கலம் என்று
சொல்லப்படும் இந்த ஆன்லைன் விளையாட்டு, விளையாடுபவர்களின் உயிருக்கே உலை
வைக்கிறது. இந்த விளையாட்டு மொத்தம் 50 நாட்கள் நீள்கிறது. விளையாடும்
நபர்களுக்கு ஆரம்பத்தில் எளிதான இலக்குகள் விதிக்கப்பட்டு, கடைசி நாளான
50–வது தினத்தன்று ‘தற்கொலை செய்துகொள்’ என்று நிபந்தனை விதிக்கிறது.
விளையாட்டு மிதப்பில் அதனை விளையாடுபவர்களும், உயரமான கட்டிடங்களில் இருந்து குதித்து தங்கள் இன்னுயிரை மாய்த்து கொள்கின்றனர். இந்தியாவில் சிறார்கள் இவ்விளையாட்டிற்கு அடிமையாகி உயிரை மாய்க்கும் நிலையானது தொடர்கிறது. தற்கொலை கேமாக அறியப்படும் ‘புளூ வேல்’ கேமிற்கு தடை விதித்து உள்ள மத்திய அரசு இணைப்பை நீக்குமாறு கூகுள், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கு உத்தரவிட்டு உள்ளது. இருப்பினும் விளையாட்டு தொடரும் நிலையானது காணப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 10 வகுப்பு மாணவி புளூ வேல் விளையாட்டிற்கு அடிமையாகி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொள்ள சென்று உள்ளார். நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி ஆற்றின் கரையோரத்தில் நின்று தற்கொலை செய்துக் கொள்ள முயற்சி செய்து உள்ளார். அப்போது அவ்வழியாக போலீசார் ரோந்து சென்றனர். மாணவி அருகே சென்று அவரை காப்பாற்றினர். மாணவியின் கையில் திமிங்கலம் வரைபடம் வரையப்பட்டு இருந்து உள்ளது. கூர்மையான ஆயுதம் கொண்டு இதனை அவர் வரைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...