வாட்ஸ்அப் தனது பயனாளர்கள் பகிரும் செய்திகளை பாதுகாப்பதில் மிகவும் கண்டிப்புடன் உள்ளது.
செய்திகளை அனுப்புபவர் மற்றும் பெறுபவரைத் தவிர யாராலும் அதை படிக்க முடியாது. காவல்துறை நினைத்தாலும் செய்திகளை எடுக்க முடியாது.
வாட்ஸ்அப்-இன் செய்தி தொடர்பாளர் கார்ல் வூக் இந்தியா வந்திருந்தபோது, சில குறிப்பிட்ட நபர்களின் வாட்ஸ்அப் செய்திகளை அரசு கேட்டதற்கு, அவ்வாறு தருவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறினார்.
முன்னதாக, வாட்ஸ்அப் தனது வழிகாட்டு நெறிமுறைகளை, அரசின் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு கொடுத்திருந்தது. அதில் வாட்ஸ்அப் பயனாளர்களின் செய்திகள் ரகசியக் குறியீடுகளாக அனுப்பப்படுவதால், அதை அந்த இருவரைத் தவிர யாராலும் படிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது, ஒருவர் மற்றொருவருக்கு அனுப்பும் செய்தி, அவருடைய கைபேசியிலிருந்து சர்வர் செல்வதற்குள் ரகசியக் குறியீடுகளாக மாற்றப்படும், பின்னர் பெறுபவரின் கைப்பேசிக்கு போகும் வரி, செய்திகள் ரகசியக் குறியீடுகளாகவே இருக்கும். அந்த ரகசியக் குறியீடுகளை வேறு யாரலும் படிக்க முடியாது. இதற்குப் பெயர் ‘எண்ட் டு எண்ட் என்க்ரிப்சன்’.
மேலும் வாட்ஸ்அப் பயனாளர்களின் சில தகவல்கள் மெட்டாடேட்டா எனப்படும் தகவல்கள் மொத்தமாக சேமிக்கும் இடத்தில் இருக்கும். அதாவது, இந்த மெட்டாடேட்டாவில், பயனாளரின் கைப்பேசி எண், எந்த வகையான கைப்பேசி, கைப்பேசியின் சேவை நிறுவனம், யாருடனெல்லாம் தொடர்பில் இருந்தாரோ அவர்களின் எண்கள், வாட்ஸ்அப் மூலம் இணையதளத்தில் பயனாளர் பார்த்த இணையதளங்கள், சேட் செய்த நேரம், எவ்வளவு நேரம் சேட் செய்தார், ஐபி முகவரி, பயனாளரின் இடம் மற்றும் பயனாளரின் தொடர்பு எண்கள் உள்ளிட்டவை இருக்கும். இது போன்ற தகவல்களை மட்டும்தான் காவல்துறையினர் நினைத்தால் எடுக்க முடியும். ஆனால் பயனாளர்கள் அனுப்பும் செய்திகளை யார் நினைத்தாலும் படிக்க முடியாது என்று கார்ல் வூக் கூறினார்.
மேலும், வாட்ஸ்அப் மூலம் பகிரப்படாத செய்திகள் இருந்தால், அந்த செய்திகளும் 30 நாட்களில் தானாக அழிந்துவிடும். மேலும் எந்த பயனாளரின் செய்திகளையும் சர்வர் சேமித்து வைக்காது. வாட்ஸ்அப் சர்வர் செய்திகளை பாதுகாப்பாக அனுப்பும் ஒரு ஊடகமாக மட்டுமே செயல்படுவதாகவும் வூக் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...