மேஷம்
குடும்பத்தாரின்
விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.
தந்தைவழியில் ஆதரவுப் பெருகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.
வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி
சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
ரிஷபம்
புதிய
சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள்.
அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு
உதவுவீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
மிதுனம்
எதிர்பார்ப்புகள்
தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும்.
வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.
தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி
முன்னேறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
கடகம்
குடும்பத்தில்
உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உறவினர்கள் மத்தியில்
பாராட்டப்படுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்னைக்கு சுமூக
தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில்
உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
சிம்மம்
கணவன்-மனைவிக்குள்
அன்யோன்யம் பிறக்கும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்கு
தீர்வு காண்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள்
மதிப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் இழந்த
உரிமையை பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
கன்னி
ராசிக்குள்
சந்திரன் தொடர்வதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது.
குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்கள் வரும். அநாவசியமாக யாருக்காகவும்
எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட
வேண்டி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
துலாம்
குடும்பத்தைப்
பற்றிய கவலைகள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள், செலவுகளால்
திணறுவீர்கள். உறவினர்களால் சங்கடங்கள் வரும். பண விஷயத்தில் கறாராக
இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும்.
உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் ஏற்படும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
விருச்சிகம்
குடும்பத்தினருடன்
மனம் விட்டு பேசுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். புதுத் தொழில்
தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
தனுசு
உங்கள்
செயலில் வேகம் கூடும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள்.
கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும்.
வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில்
மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
மகரம்
குடும்பத்தில்
ஒற்றுமை பிறக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த பணம்
கைக்கு வரும். புதிய நண்பர்களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள்.
வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில்
உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
கும்பம்
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிபடுவீர்கள். கணவன்-மனைவிக்குள்
விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலர் உங்களை குறைக் கூறினாலும் அதைப்
பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக
இருக்கும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
மீனம்
பிள்ளைகளின்
தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவி வழியில்
நல்ல செய்தி உண்டு. பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பழைய
பங்குதாரரை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...