மேஷம்
எதிர்பாராத
பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.
அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமாக தீர்ப்பு வரும். வியாபாரத்தில்
புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு
மேலதிகாரி வியப்பார்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
ரிஷபம்
குடும்பத்தின்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில்
நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு.
வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை
மதிப்பார்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
மிதுனம்
புதிய
கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். தாயாருடன் கருத்து
மோதல்கள் வரக்கூடும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.
உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
கடகம்
துணிச்சலாக
சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக
இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின்
உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
சிம்மம்
கடந்த
இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த சச்சரவு நீங்கும். இழுபறியாக இருந்த
வேலைகள் முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள்.
நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில்
மேலதிகாரி உதவுவார்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
கன்னி
ராசிக்குள்
சந்திரன் நீடிப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள்.
அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். சிலர் உங்கள் வாயை கிளறிப்
பார்ப்பார்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போட்டிகள்
இருக்கும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம்
வேண்டாம்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
துலாம்
பழைய
கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அண்டை, அயலார் சிலரின்
செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். எதிர்மறை எண்ணங்கள் வந்துப்
போகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக
ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
விருச்சிகம்
தன்னம்பிக்கையுடன்
பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள்.
நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
வியாபாரத்தில் பழைய பங்குதாரர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை
ஓங்கும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
தனுசு
சொன்ன
சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளால்
பெருமையடைவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். பயணங்களால்
ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் சக
ஊழியர்கள் மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
மகரம்
கடந்த
இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும்.
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும்.
உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் இழந்ததை
மீட்பீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
கும்பம்
சந்திராஷ்டமம்
தொடர்வதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தாருடன் ஈகோ
பிரச்னை வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது
நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில்
அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
மீனம்
கடினமான
காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு.
கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும்.
வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள்
தேடி வரும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...