மேஷம்
குடும்ப
வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள்
பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்
தொல்லை குறையும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில்
அதிகாரிகள் வலிய உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
ரிஷபம்
பிரியமானவர்களின்
சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் வீண் விவாதம் வந்துப் போகும்.
பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில்
சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
மிதுனம்
குடும்பத்தில்
உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரப் பதவியில்
இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப்
புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள்.
உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
கடகம்
குடும்பத்தில்
கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். விலகி நின்றவர்கள்
விரும்பி வருவார்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வாகனப் பழுது நீங்கும்.
வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை
மதிப்பார்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
சிம்மம்
ராசிக்குள்
சந்திரன் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக
முடிவெடுக்கப்பாருங்கள். உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை
கெடுத்துக் கொள்ளாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில்
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால்
அலைகழிக்கப்படுவீர்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
கன்னி
கணவன்-மனைவிக்குள்
அனுசரித்துப் போவது நல்லது. வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.
சகோதர வகையில் சங்கடங்கள் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.
வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன்
மோதல்கள் வேண்டாமே.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
துலாம்
திட்டமிட்ட
காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். சொந்த-பந்தங்கள் மதிப்பார்கள்.
பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். கல்யாண முயற்சிகள்
பலிதமாகும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள்
பாராட்டுவார்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
விருச்சிகம்
உங்கள்
பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக்
கூடும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும்.
வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யாகத்தில் சில
நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
தனுசு
கணவன்-மனைவிக்குள்
நெருக்கம் உண்டாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும். நட்பு வட்டம் விரியும்.
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.
வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை
விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
மகரம்
சந்திராஷ்டமம்
தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். அடுத்தவர்கள்
விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வாக்குறுதியை
நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும்.
உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
கும்பம்
குடும்பத்தில்
ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். தாயாரின் உடல் நலம் சீராகும்.
எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள்
மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில்
திருப்தி உண்டாகும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
மீனம்
பணப்புழக்கம்
அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வாகன வசதிப்
பெருகும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள்
கருத்துக்கு ஆதரவு பெருகும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...