மேஷம்
முக்கிய
பிரமுகர்களை சந்திப்பீர்கள். புது வேலைக் கிடைக்கும். தாயாரின் உடல்
நலத்தில் கவனம் தேவை. நண்பர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில்
பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி
முன்னேறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
ரிஷபம்
தைரியமாக
சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப்
பொழிவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம்
உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில
சூட்சுமங்களை சொல்லித் தருவார்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
மிதுனம்
கடந்த
இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள்
கிடைக்கும். வராது என்றிருந்த பணம் வரும். வியாபாரத்தில் போட்டிகள்
குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
கடகம்
ராசிக்குள்
சந்திரன் தொடர்வதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது.
குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை
நிறுத்துங்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புது
முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
சிம்மம்
சிக்கனமாக
இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும்.
பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும்.
வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக
ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
கன்னி
குடும்பத்தில்
ஒற்றுமை பிறக்கும். வி. ஐ. பிகள் அறிமுகமாவார்கள். கைமாற்றாக கொடுத்த
பணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.
வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில்
உங்கள் கை ஓங்கும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
துலாம்
தவறு
செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசி
மகிழ்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள்.
வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில்
முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
விருச்சிகம்
கடந்த
இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும்.
உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வாகனப்
பழுது நீங்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக
ஊழியர்கள் உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
தனுசு
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். குடும்பத்தில்
உள்ளவர்கள் தன்னை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்று நினைப்பீர்கள்.
பேச்சில் காரம் வேண்டாம். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி
வரும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ
பிரச்னை வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
மகரம்
உங்கள்
திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை
உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். விலை உயர்ந்தப் பொருட்கள்
வாங்குவீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில்
புது பொறுப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
கும்பம்
குடும்பத்தினருடன்
சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.
வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.
வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள்
அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
மீனம்
வருங்காலத்
திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள்.
ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது
தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...