மேஷம்
கணவன்-மனைவிக்குள்
மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதியவர்கள்
அறிமுகமாவார்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது சலுகைகளை
அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
ரிஷபம்
ராசிக்குள்
சந்திரன் தொடர்வதால் சோர்வடைவீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து
நீங்கும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். யாரை
நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை
போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வரக்கூடும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
மிதுனம்
கணவன்-மனைவிக்குள்
அனுசரித்துப் போவது நல்லது. வாகனம் தொந்தரவு தரும். சகோதர வகையில்
மனத்தாங்கல் வரும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். வியாபாரத்தில்
மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி
முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
கடகம்
எதிர்பார்ப்புகள்
யாவும் வெற்றியடையும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர்
உங்களைத் தேடி வருவார். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புதுத் தொழில் தொடங்குவீர்கள்.
உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
சிம்மம்
சாதிக்க
வேண்டுமென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பழைய
கடன் பிரச்னைகள் தீரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில்
புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை
உணர்வீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
கன்னி
குடும்பத்தில்
சந்தோஷம் நிலைக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வராது என்றிருந்த பணம்
கைக்கு வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில்
புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக்
கிட்டும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
துலாம்
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் ஒரு விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள். கணவன்-
மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அடுத்தவர்களை குறைக்
கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில்
பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
விருச்சிகம்
பிள்ளைகள்
கேட்டதை வாங்கித் தருவீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள்.
மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பிரார்த்தனைகள் நிறைவேறும்.
வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில்
புது பொறுப்புகளை ஏற்பீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
தனுசு
குடும்பத்தில்
உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பயணங்களால் ஆதாயம் உண்டு.
உறவினர்கள், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து
நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள்
கருத்துக்கு ஆதரவு பெருகும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
மகரம்
குடும்பத்தின்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள்
நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம்
உண்டு. கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து
உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
கும்பம்
பழைய
இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில
காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள்
வந்து நீங்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் லாபம் வரும்.
அலுவலகத்தில் நிம்மதி உண்டு.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
மீனம்
குடும்பத்தாரின்
விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக
அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். தந்தைவழியில் உதவிகள் கிட்டும்.
வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக்
கூடும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...