மேஷம்
ராசிக்குள்
சந்திரன் நுழைவதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில்
சண்டை, சச்சரவு வந்துப் போகும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க
வேண்டாம். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வெளி உணவை தவிர்ப்பது
நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ்,கிரே
ரிஷபம்
விடாப்பிடியாக
செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப்
போங்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்துப் போகும். நண்பர் ஒருவர் உங்களை
உதாசீனப்படுத்தும் வகையில் நடந்துக் கொள்வார். வியாபாரத்தில் கடினமாக
உழைத்து லாபம் பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்:3
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை,மஞ்சள்
மிதுனம்
தவறு
செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை
பகிர்ந்துக் கொள்வார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். விருந்தினர்
வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை
அறிவிப்பீர்கள்.
அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்: ஊதா,இளஞ்சிவப்பு
கடகம்
பிரச்னைகளை
சமாளிக்கும் மனோ பலம் அதிகரிக்கும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு
அதிகமாகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி
வருவார். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்
கொடுத்து வேலை வாங்குவீர்கள்.
அதிஷ்ட எண்:9
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம்,ப்ரவுன்
சிம்மம்
கடந்த
இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். சுப
நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில்
மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் புதிய
சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள்.
அதிஷ்ட எண்:6
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே,பச்சை
கன்னி
சந்திராஷ்டமம்
தொடங்குவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தில்
உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள்.
அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை
என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும்.
அதிஷ்ட எண்:1
அதிஷ்ட நிறங்கள்: பிங்க்,க்ரீம் வெள்ளை
துலாம்
உங்கள்
திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை
வெற்றியடையும். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். புது ஏஜென்சி
எடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள்.
அதிஷ்ட எண்:4
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை,மஞ்சள்
விருச்சிகம்
எதிர்பாராத
பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். அதிகாரப் பதவியில்
இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவீர்கள்.
வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள்.
அதிஷ்ட எண்:5
அதிஷ்ட நிறங்கள்: மெரூண்,வெள்ளை
தனுசு
மற்றவர்களை
நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள்.
பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை
குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை
விரிவுப்படுத்துவீர்கள்.
அதிஷ்ட எண்:2
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம்,பிங்க்
மகரம்
எதிர்ப்புகளையும்
தாண்டி முன்னேறுவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. ஓரளவு பணவரவு
உண்டு ஆனால் சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். மகளுக்கு நல்ல வரன்
அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும்.
அதிஷ்ட எண்:8
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை,ரோஸ்
கும்பம்
குடும்பத்தினருடன்
சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து
உயரும். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். பயணங்களால்
மகிழ்ச்சி தங்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய
வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
அதிஷ்ட எண்:1
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு,க்ரீம்வெள்ளை
மீனம்
கடந்த
இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும்.
குடும்பத்தில் நிம்மதி உண்டு. உடல் நலம் சீராகும். பழைய சிக்கல்களை
தீர்ப்பீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில்
சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்:9
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு,கிரே
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...