மேஷம்
குடும்பத்தினருடன்
வீண் வாக்குவாதம் வந்துப் போகும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.
உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள்.
வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில்
பணிகளை போராடி முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,மஞ்சள்
ரிஷபம்
கணவன்-மனைவிக்குள்
மனம் விட்டு பேசுவீர்கள். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள்.
வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.
புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய
பொறுப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ்,ப்ரவுன்
மிதுனம்
எதிர்பார்ப்புகள்
நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள்
எடுப்பார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில்
வாபடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மதிப்புக்
கூடும். அதிஷ்ட எண்:3
அதிஷ்ட நிறங்கள்: வைலெட்,இளஞ்சிவப்பு
கடகம்
கணவன்-மனைவிக்குள்
அன்யோன்யம் பிறக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தடைப்பட்ட வேலைகள்
முடியும் நாள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு
கிட்டும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்:2
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை,ப்ரவுன்
சிம்மம்
சந்திராஷ்டமம்
தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தினர் சிலர்
உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். நன்றி மறந்த ஒருவரை
நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த
பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம்.
அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள்,பிங்க்
கன்னி
சாமர்த்தியமாக
செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும்.
மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில்
வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி
மதிப்பார்.
அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே,ப்ரவுன்
துலாம்
பணப்புழக்கம்
அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப்
பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேற்று மதத்தவர் உதவுவார்.
வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய
முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார்.
அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு,பச்சை
விருச்சிகம்
புதிய
சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள்.
அக்கம்&பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். பயணங்கள் சிறப்பாக
அமையும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.
உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.
அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்: மெரூண்,ப்ரவுன்
தனுசு
பால்ய
நண்பர்கள் உதவுவார்கள். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் பணம்
கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைக்
கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில்
விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.
அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண்,ஆரஞ்சு
மகரம்
குடும்பத்தினர்
உங்கள் ஆலோசனையை ஏற்பார். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும்.
வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை
ஓங்கும்.
அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்: கிரே,மஞ்சள்
கும்பம்
குடும்பத்தில்
கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்த பணம்
கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். ஆடை, அணிகலன் சேரும்.
வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள்
தேடி வரும்.
அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு,ஊதா
மீனம்
ராசிக்குள்
சந்திரன் நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து
நீங்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். சில
விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் பழைய
சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த
வேண்டாம்.
அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள்,கருநீலம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...