Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC GROUP 2A தேர்வு எளிது : மங்கையர் மகிழ்ச்சி

மதுரை: நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர்.மதுரையில் தேர்வு எழுதியவர்கள் கூறியதாவது:

ஜி.பிரவீணா: வினாக்கள் எளிதாக இருந்தன. பொதுஅறிவு வினாக்கள் சற்று கடினம். ஆங்கில வினாக்கள் மிக எளிமை.உலகநடப்பு, அரசியல், பொதுஅறிவு வினாக்கள் எளிதாக இருந்தன.

எம்.சரண்யா: அரசியலமைப்பு சட்டம் குறித்த வினாக்கள் அதிகம் இடம் பெற்றிருந்தன. அரசியல் அறிவியல் படித்திருந்தால் விடை அளிப்பது எளிது. முந்தைய டி.என்.பி.எஸ்.சி., வினாக்கள் அடிப்படையில் தேர்வுக்கு தயாரானேன்.

எஸ்.அனின்கா : ஆங்கில வினாக்கள் எளிதாக இருந்தன. அறிவியல் பாட வினாக்கள் கடினம். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பாடங்களில் இருந்து, அதிக வினாக்கள் இடம்பெற்றன.

ரென்சி: 'கடந்த லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எத்தனை சதவீதம்' என்பன போன்ற எண்கள் அடிப்படையில் விடையளிக்கும் விதத்தில் வினாக்கள் இடம்பெற்றிருந்தன. கடந்த 10 ஆண்டு தேர்வுகளில் இடம்பெற்றிருந்த வினாக்களை படித்தேன்; உதவியாக இருந்தது.

லிங்சி: சமச்சீர் கல்வி புத்தகத்தை அதிகம் படித்ததால், தேர்வு எளிதாக இருந்தது. அனைத்து பாடங்களுக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.

ஆஷ்னா: ஆங்கில பாட வினாக்கள் எளிது. சட்டவிதிகள் சார்ந்த வினாக்கள் சற்று கடினமாகவே இருந்தன. இவ்வாறு கூறினர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive