ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு
நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு
மூலம் 1,953 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இத்தேர்வு ஆக., 6 ல் நடக்கிறது.இதற்காக 7.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தேர்வர்களுக்கான 'ஹால்டிக்கெட்' டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு கண்காணிப்பு பணிக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஜாக்டோ ஜியோ சார்பில் ஆக., 5 ல் சென்னையில் கோட்டையை நோக்கி ஊர்வலம் நடக்கிறது.
இதில் 70 சங்கங்களைச் சேர்ந்த பல லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.அவர்கள் ஆக., 6 காலையில் தான் ஊர்களுக்கு திரும்புவர். இதனால் அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது சிரமம். போராட்டத்தை காரணம் காட்டி சில ஆசிரியர் சங்கங்களும் தேர்வு பணியில் ஈடுபட போவதில்லை என, தெரிவித்துள்ளன. இதனால் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தேர்வு நடத்துவது குறித்து டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம், மாவட்ட நிர்வாகங்களுடன் ஆலோசித்து வருகிறது. ஓரிரு நாட்களில் தேர்வு நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்,' என்றார்.
2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு
ReplyDelete2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு
பணி, முன்னுரிமை, சலுகை மதிப்பெண் வழங்க கோரி,
போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
அனைவரும் வாரீர்!
நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
நேரம்: காலை 10:30
இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
திருச்சி
போராட்ட பாடல் வரிகள்
அன்புள்ளம் கொண்ட ஐயாவிற்கு ஆசிரியரின் கதறல்
அன்புள்ளம் கொண்ட ஐயாவிற்கு ஆசிரியரின் கதறல்
டெட் நானும் எழுதினேன், நாலு வருசம் உருகினேன்.
தேர்ச்சி பெற்ற நானும் வேலையின்றி தவிக்கிறேன்
அன்புள்ளம் கொண்ட ஐயாவிற்கு ஆசிரியரின் கதறல்
நீட்டுதேர்வு வேணாம்னு நீண்ட அறிக்கை கொடுத்தீங்களே!
டெட் தேர்வர்க்கு என்ன பதிலுன்னு சொல்லிடுங்க!
ஐயா டெட் தேர்வர்க்கு என்ன பதிலுன்னு சொல்லிடுங்க!
சுதந்திரதினஉரையிலஅம்மாசொன்னத கேட்டீங்களா
மறக்காம அவங்க சொன்னத செஞ்சிடுங்க!
காலத்தே பணியத்தானே நிரப்பிடுங்க!
அன்புள்ளம் கொண்ட ஐயாவிற்கு ஆசிரியரின் கதறல்
வேலயைில்லா சிறுக்கின்னு கணவன் தினமும் அடிக்கிறான்.
துரதிஷ்டகாரியின்னு மாமியார்கூட துரத்துறா!
தகுதிதேர்வு பாசுஇன்னா தனியார் பள்ளியும் தவிர்க்குறான்
எந்த வேலையும் கிடைக்காம நான் அழுகுறேன்.
ஐயா எந்த வேலையும் கிடைக்காம நான் அழுகுறேன்.
அன்புள்ளம் கொண்ட ஐயாவிற்கு ஆசிரியரின் கதறல்
சுமார்ட்டு கிளாசு வருதுன்னு சுமார்ட்டா நீங்களும் சொன்னீங்களே
2013 க்கு முன்னுரிமைன்னு சூப்பரா நீங்களும் சொல்லிடுங்க
சூப்பரா நீங்களும் சொல்லிடுங்க!
வீணாப்போனவ போறான்னு வீதியில திட்டுறாங்க
விதிய நினைச்சு அழுதாலே பிள்ளைக்கும் பாலு சுரக்கலிங்க
பிள்ளைக்கும் பாலு சுரக்கலிங்க
அன்புள்ளம் கொண்ட ஐயாவிற்கு ஆசிரியரின் கதறல்
சென்னையில ஊருவலம் மதுரையில போராட்டம்
செங்கோட்டையன் மகராசா செவிசாயிங்க!
செங்கோட்டையன் மகராசா செவி சாயிங்க!
சலுகை மதிப்பெண் கொடுக்கலாம்னு நீதிமன்றம் சொல்லிடுச்சு
வருடத்திற்கு ரெண்டு மார்க்கு தந்திடுங்க!
சலுகைமதிப்பெண் கொடுத்தீங்கன்னா சந்ததியே வாழ்த்துமுங்க
வாய்க்கரிசி வேணாமுங்க! வடியரிசி தந்திடுங்க!
வடியரிசி தந்திடுங்க!
அன்புள்ளம் கொண்ட ஐயாவிற்கு ஆசிரியரின் கதறல்
இப்படிக்கு
டெட் எழுதிய வெ(ட்டி)ற்றி செல்வி.
2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி
பெற்றோர் கூட்டமைப்பு.
மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
வடிவேல் சுந்தர் 8012776142.
இளங்கோவன் 8778229465
exam iruka illaiya !!!!!!
ReplyDelete