அலோபதி மருத்துவம் சார்ந்த படிப்புக்கு 'நீட்' தேர்வுஎழுத வேண்டிய நிலையில்,
தமிழகத்தில் சென்னை, நெல்லை ஆகிய இடங்களில் சித்த மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுக்கு 100 இடங்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள சித்த மருத்துவம், ஹோமியோபதி. ஆயுர்வேதம் ஆகிய மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள்வழங்கும் பணி இன்று தொடங்கியது. வரும் 30-ம் தேதி வரையிலும் விண்ணப்பம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.வழக்கமாக சித்த மருத்துவப் படிப்புக்கு பெரிய வரவேற்பு இருப்பதில்லை. ஆனால், இன்று விண்ணப்ப விநியோகம் தொடங்கிய சில மணி நேரத்திலேயே 1500 பேர் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர்.
கடந்த ஆண்டு 1000விண்ணப்பம் மட்டுமே மாணவர்கள் வாங்கிய நிலையில் இந்தஆண்டு இந்தப் படிப்புக்குக் கிடைத்து இருக்கும் வரவேற்பு காரணமாக கூடுதலாக 500 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.அலோபதி மருத்துவப் படிப்புக்கு இந்த ஆண்டு 'நீட்' தேர்வு அவசியம் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்ட நிலையில், இது வரையிலும் எந்த முடிவும் அறிவிக்கப்படாமல் இழுபறியாக உள்ளது. ஆனால், சித்த மருத்துவப் படிப்புக்கு எந்தவிதமான நுழைவுத் தேர்வும் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கும் எனபதால் இந்தப் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள் உள்ளதால், இங்கு சேர மாணவர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு 500 ரூபாயும் சிறப்புப் பிரிவினருக்கு 100 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவருக்கு இலவசமாக விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் 31-ம் தேதிக்குள் சேர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.சித்த மருத்துவப் படிப்புக்கு மாணவர்களிடம் ஏற்பட்டு இருக்கும் ஆர்வம், ஆசிரியர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...