வகுப்பறையில் தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்துவதில் ஆசிரியர்களை முதன்மையானவர்களாக மாற்றுவதற்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தற்பொழுது, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மாநில கவுன்சில்,
திருத்தப்பட்ட பாடத்திட்டங்களுக்கான புதிய பாடப்புத்தகங்களை
உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு
உதவி பெறும் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் அனைவருக்கும்
பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளது.
இந்த பயிற்சி வகுப்புகள் ராஷ்திரிய மதியிக் சிக்ஷா அபியான்
மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுட ன் இணைந்து
நடத்தப்படுகிறது.
ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறைகளில் இருக்கும் ப்ரொஜெக்டர்
அல்லது ஸ்மார்ட் போர்டுகளைப் பயன்படுத்துவதில்லை என்று மாணவர்களிடம்
இருந்து அதிகளவில் புகார்கள் வருகின்றன. அவ்வாறு, தொழில்நுட்பங்களைப்
பயன்படுத்த தெரியாத ஆசிரியர்களை அடையாளம் கண்டு, வகுப்பறைகளில் ஏற்கனவே
செயல்பாட்டில் உள்ள டிஜிட்டல் கருவிகளின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும்
தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்.
இதுகுறித்து ராஷ்திரிய மதியிக் சிக்ஷா அபியான் தமிழ்நாடு
பிரிவின் இயக்குநர் கண்ணப்பன் கூறுகையில், பாடத்திட்டத்தினை மாற்றுவதன்
மூலம் வகுப்பறைகளை டிஜிட்டல் மயமாக்குவதுதான் எங்கள் நோக்கம். அனைத்து
ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிப்பதற்காகத் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள்
நியமிக்கப்படுவார்கள். இந்த பயிற்சி வகுப்புகளில் மென்பொருள், ஸ்டடி ஆப்,
ஆன்லைனில் கிடைக்கக்கூடிய ஆய்வு பொருட்கள் ஆகியவை குறித்து பயிற்சி
அளிக்கப்படும். இப்போது, புதிய பாடத்திட்டத்திற்கு அணுகுமுறையின் ஒரு
பகுதியாக இந்த பயிற்சி வகுப்பின் மீது கவனம் செலுத்துகிறோம். இந்த பயிற்சி
வகுப்பு அடுத்த மாதம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...