இந்திய உச்ச நீதிமன்றம் திரு ட்டி.எஸ்.நகரா என்கிற ஓய்வு பெற்ற இராணுவ
அதிகாரி தொடர்ந்த ஓய்வூதியம் தொடர்பான ஒரு பொது நல வழக்கில்
17/12/1982ல் வரலாற்றுச் சிறப்பு மிக்கதீர்ப்பு வழங்கியது.
அதன் காரணமாக டிசம்பர் 17 என்பது இந்திய அளவில் ஓய்வூதியர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதில் ஒன்றிணையும் விதமாக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் துவக்கப்பட்டு 26 ஆண்டுகள் கழித்து செப் 1998ல் ஒப்பந்தம் வழியாக ஏற்கப்பட்ட ஓய்வூதியம் முதன் முதலாக 17/12/2000 அன்றுநடைபெற்ற அரசு விழாவில் அன்றைய தமிழக முதல்வர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
ஓய்வூதிய உரிமை தொடர்பான மேற்சொன்ன பொது நல வழக்கு அன்றைய இந்திய தலைமைநீதியரசர் ஒய்.வி.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வினால்பரிசீலிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப் பட்டது. தீர்ப்பினை தொடங்கும் நீதியரசர் இவ்வாறு துவக்குகிறார். “மனுதாரர்களின் கோரிக்கையைபரிசீலிக்கிற போது ஆங்கில நாட்டு அரசின் பிரதம மந்திரியாக பதவி வகித்த ஊல்சியின் இறுதிபிரார்த்தனையான” அரசிடம் எவ்வளவு பய பக்தியுட்ன் சேவை செய்தேனோ, அது போல நான்இறைவனிடம் சேவை செய்திருந்தால் என் வயோதிக காலத்தில், இந்த ஈன வறிய நிலைக்கு நான்அவரால் தள்ளப்பட்டிருக்க மாட்டேன்” என்ற கூக்குரல் போன்றும்,
“நான் இரத்தம் சிந்திய (என் வாழ்நாளில் சேவை செய்த) அதே வாழ்க்கை முட்களில் வீழ்கின்றேன்” என்ற ஷெல்லியின் சோக ராகமாகவும் உள்ளது”.
அந்த தீர்ப்பில் சொல்லப்பட்ட பலஅம்சங்களில் மிகக் குறிப்பாக சொல்லப்படும் 3 அம்சங்கள்
(1) ஓய்வூதியர் அனைவரும் ஒரேதன்மையினர்தான் அவர்களை பணி நிறைவு பெற்ற நாளின் அடிப்படையில் பிரிப்பது சரியன்று,
(2)ஓய்வூதியம் அரசின் விருப்பப்படி வழங்கும் கருணைக் கொடையோ அல்லது வெகுமதியோ, அல்லதுபரிசோ கிடையாது அது அவர்களின் சொத்துரிமைக்கு நிகரான உரிமை,
(3) அரசுப் பணியில்உள்ளவர்களுக்கு எப்போதெல்லாம் ஊதியம் உயர்த்தப்படுகிறதோ, அப்போது ஓய்வூதியதாரர்களுக்கும்ஓய்வூதியம் உயர்த்தப்பட வேண்டும் என்பனவையாகும்.
: புதிய பென்சன் திட்டம் என 01.04.2003ற்கு பின்னர் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என சொல்லப்பட்டு 13 ஆண்டுகள் கடந்த பின்னரும் அதற்கானஓய்வூதியத்திட்டம் தொடர்பாக நிர்வகிக்கும் அதிகார அமைப்பிடமிருந்து கணக்கீடு போன்றவை இதுவரை வெளியிடப்படவில்லை என்பது வேதனையின் உச்ச கட்டம்.
இதன் நடுவில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில அரசுகள் இத்தகைய புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு தொகை செலுத்தியவர்கள் பணி ஓய்வு / தன்விருப்ப ஓய்வு / இறப்பு / பணிநீக்கம் / ராஜினாமா போன்ற எந்த வகையில் பணி முடிவு பெற்றாலும் அவர்களமிருந்து பிடித்தம் செய்த பங்குத் தொகையை மட்டும் (பென்சன் என்றில்லாமல்) தீா்வு செய்து வருகின்றன என்பது கூடுதலான வேதனைக்குரிய அம்சம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...