கேரளாவில் பள்ளி ஒன்றில் மாணவர்களை வேறுபடுத்தி காட்டும் வகையில் சீருடை அறிமுகம் செய்யப்பட்டது
சர்ச்சை ஏற்படுத்தியது.
புகார்:
கேரள மாநிலம் மலப்புரம் பண்டிக்காடு பகுதியில் உள்ள ஆங்கில நடுநிலைப்பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவர்களையும் சரியாக படிக்காத மாணவர்களையும் வேறுபடுத்தி காட்டும் வகையில் இரு வேறு சீருடை அறிமுகபடுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. நன்றாக படிக்கும் மாணவர்கள் சாம்பல் நிறத்திலான சீருடையையும், மற்ற மாணவர்கள் வழக்கமான சீருடையையும் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாக மாநில குழந்தைகள் வாரியத்திற்கு புகார் வந்தது.
அறிவுரை:
அங்கு சென்ற அதிகாரிகள் மாணவர்களின் கருத்துகளை கேட்டறிந்தனர். அதில், பல மாணவர்கள் இந்த செயல் தங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறினர். இதனையடுத்து இரு வேறு சீருடை முறையை கைவிட பள்ளிக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இதனை பள்ளி ஏற்கவில்லை.
நோட்டீஸ்:
மீண்டும் ஒரு மாதத்திற்கு பின் அதிகாரிகள் அங்கு சென்ற போது இரு வேறு சீருடையை மாணவர்கள் அணிந்து வந்ததை பார்த்தனர். இதனையடுத்து அவர்கள் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷனுக்கும், மாவட்ட குழந்தைகள் நல கமிட்டிக்கும் புகார் அளித்தனர். இதனையடுத்து அந்த பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ரத்து:
இது தொடர்பாக பள்ளி முதல்வர் அப்துல் கூறுகையில், மாணவர்களின் பழக்க வழக்கங்கை தெரிந்து கொள்ள இரு வேறு உடை அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த முறை கைவிடப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...