"மாநகரத்திலிருந்து கிராமத்தை நோக்கி" - திருச்சி
மாவட்டம் , தொட்டியம் ஒன்றியம், எம்.களத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய
தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் உதவி ஆசிரியர் குருமூர்த்தி, ஒவ்வொரு
மாணவர்களின் கற்றல் திறனுக்கேற்ப கற்பித்து வருவதால் இவருடைய கற்பித்தல் செயல்பாடுகளைப்
பார்த்து அவ்வூரில் தனியார் பள்ளிக்குச் சென்ற பல மாணவர்கள் இப்பள்ளியில்
சேர்ந்துள்ளார்கள். மக்கள்தொகை 440 பேர் மட்டுமே கொண்ட இவ்வூர் பள்ளியில்
26 மாணவர்கள் பயின்று வந்தனர். அதனால் பள்ளியின் மாணவர் சேர்க்கையை உயர்த்த
பிற பகுதிகளிலிருந்தும் மாணவர்களை சேர்க்கும் வண்ணம் "மெல்ல
கற்கும் மாணவர்களையும் படிக்க வைக்கும் பள்ளி" என்ற தலைப்பில் துண்டு
பிரசுரம் அச்சடித்து மக்களுக்கு வழங்கினார். அதை முகநூலிலும்
பதிவேற்றினார். அதைப் பார்த்து சேலம் மாவட்டத்திலிருந்து ஒரு பெற்றோர் இவரை
தொடர்புகொண்டு, மூன்றாம் வகுப்பு படிக்கும் தன் மூத்த மகன்
கற்றலில் பின்தங்கி உள்ளதாகவும், இதுவரை மூன்று தனியார் பள்ளிகளில் படிக்க
வைத்தும் கற்றலில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனவும் இதனால் மன உளைச்சலுக்கு
ஆளாகியிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் முகநூலில் பார்த்த துண்டு
பிரசுரம் தனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார். பின்பு
அப்பெற்றோரையும் அவர்களின் மகன்களையும் பள்ளிக்கு வரவழைத்து, மூத்த மகனின்
கற்றல் நிலையை சோதித்தபோது அம்மாணவனுக்கு ABCD மட்டுமே தெரிந்திருந்தது.
தமிழ் எழுத்துக்கள் தெரியவில்லை.
கணக்கில் ஓரிலக்க கூட்டல்
கணக்கு கூட தெரியாமலிருந்ததை அறிந்துகொண்ட ஆசிரியர் குருமூர்த்தி, மூன்று
மாதங்களில் தங்கள் மகனை படிக்க வைத்துவிடுவேன் என உறுதியளித்தபோது
அப்பெற்றோர் அகமகிழ்ந்தனர். தற்போது அவர்களுடைய மகன்கள் இருவருமே தாத்தா
, பாட்டியுடன் அவ்வூரிலேயே தங்கி அப்பள்ளியில் படித்து வருகிறார்கள். (
மூத்த மகன் நான்காம் வகுப்பிலும் , இளைய மகன் மூன்றாம் வகுப்பிலும்
படிக்கிறார்கள் ). இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் அவர்களுடைய மகன்களின்
கற்றலில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் கண்டு அப்பெற்றோர் மகிழ்ச்சியில்
உள்ளனர். அம்மகிழ்ச்சியை முகநூலிலும் பகிர்ந்துள்ளனர்.
மேலும்
எம். களத்தூர் அஞ்சலகத்தில் பணிபுரியும் "பேபி" என்ற உதவியாளர்
இப்பள்ளிக்கு தபால் கொடுக்க செல்லும்போதெல்லாம் இப்பள்ளியின்
செயல்பாடுகளைப் பார்த்து , தன் மகளை இப்பள்ளியில் சேர்ப்பதற்காகவே
இவ்வூருக்கு குடிபெயர்ந்து வந்துவிட்டார் என்பது குறிப்பிடதக்கது.
கற்றல்
- கற்பித்தல் மட்டுமல்லாமல் பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளையும்
மேம்படுத்தியுள்ளனர் இப்பள்ளியின் ஆசிரியர்கள். தன்னார்வலர்கள் மூலம்
பள்ளிக்கு தரை ஓடு பதித்தல், வட்டமேசை மற்றும் நாற்காலிகள், 32' LED TV,
ஒலி பெருக்கி, நூலகம் ஆகியவற்றை
அமைத்துள்ளனர்.
இப்பள்ளியின்
தலைமை ஆசிரியர். திருமதி. சித்ரா அவர்களும் , உதவி ஆசிரியர்
குருமூர்த்தியும் பள்ளியின் வளர்ச்சிக்கும் , மாணவர்களின் வளர்ச்சிக்கும்
தொடர்ந்து செயலாற்றி வருகின்றனர்.
Hearty wishes
ReplyDeleteCongratulation and keep it up
ReplyDeleteதலைமை ஆசிரியர். திருமதி. சித்ரா அவர்களும் , உதவி ஆசிரியர் குருமூர்த்தி அவர்களும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteWishes to teachers
ReplyDeleteGood job sir
ReplyDelete