இந்திய
ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி.,யில், தத்கல்
முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு,
'பே ஆன் டெலிவரி' திட்டம், விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ரயிலில் பயணம் செய்ய விரும்புவோர், வீட்டில் இருந்தபடியே, மொபைல் ஆப் மூலம், டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அதற்கான கட்டணத்தை உடனே செலுத்தாமல், டிக்கெட் கிடைத்ததும் செலுத்தும், 'பே ஆன் டெலிவரி' முறை ஏற்கனவே அமலில் உள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட பயண டிக்கெட்டை, பயணியின் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுப்பவரிடம், சேவை கட்டணத்துடன் கூடிய டிக்கெட் தொகையை, ரொக்கமாக வழங்கலாம்;

பயண டிக்கெட் உறுதியானது குறித்த எஸ்.எம்.எஸ்., இ - மெயில் கிடைத்தவுடன்,
அதற்கான கட்டணத்தை, ஆன்லைனிலும் செலுத்தலாம். தத்கல் முறையில் டிக்கெட்
முன்பதிவு செய்வோருக்கும், தற்போது, பே ஆன் டெலிவரி திட்டம்,
விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தினமும், 1.30 லட்சம் வாடிக்கையாளர்கள், ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். பயண நேரத்துக்கு, 48 மணி நேரத்துக்கு முன், தத்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது.தத்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, டிக்கெட் உறுதியாவதற்கு முன், 'ஸ்டாண்டர்டு ஆன்லைன் பேமென்ட் கேட்வே' வழியாக, பணம் செலுத்தும் முறை, இதுவரை பின்பற்றப்பட்டு வந்தது. இந்த முறையில் பணம் செலுத்துவது தாமதமாவதால், வாடிக்கையாளர்கள் உறுதியான டிக்கெட் கிடைக்கும் வாய்ப்பை இழந்தனர். எனவே, இதை தவிர்க்கும் வகையில், டிக்கெட் உறுதியான பின், கட்டணம் செலுத்தும் முறை, தத்கல் திட்டத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...