Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எப்படி இத்தனை ஆதரவுகள் கல்வித்துறை செயலாளருக்கு கிடைக்குறது ??

மாண்புமிகு ; உதயசந்திரன் அவரகளின்  உணர்வு மிக்க உரைவீச்சை பயிற்சியின் போது நான் கேட்டேன். 
தேன் கலந்த நாவில் உதிர்க்கப்பட்ட உன்னதமான உரையது.அதிகார வர்க்கத்தின் காரம் அதில் இல்லை மாறாக அன்பாக அழைக்கிறார் நம்மை அர்பணிப்பணிப்பு வாழ்க்கை வாழ.நம் இனம், மொழியின் மீது தனியாத தாகத்தை கொண்டுள்ளார். கவித்துவமான கருத்து செறிவுமிக்க உரை அது. கற்பித்தலில் புதுமையையும் அறிவியல் தொழில்
நுட்பத்தையும் நடைமுறைபடுத்த வலியுறுத்துகிறார்ஒவ்வொரு மாணவரும் நம் நாட்டின் மதிப்புமிக்க சொத்து என்கிறார் . தற்கால கல்விமுறை குறித்து தாம் கவலை கொண்டுள்ளதாக கூறும் அவர்  தரமான கல்வியை மாணவர்களுக்கு  வழங்க வலியுறுத்துகிறார்நீட் தேர்வை தமிழக மாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட போர் / பகை என்று ஆதங்கப்படுகிறார். ஆசியரகள் தான் மாணவர்களின் வழிகாட்டி ஒளிகாட்டி என பாராட்டி பேசுகிறார். தனது  கருத்து தவறு என்றால் முட்டாள் தனமானது என சுட்டிக் காட்டுங்கள் என்கிறார்.ஒரு IAS அதிகாரி இவ்வாறு பேசுவது அபூர்வம்.இது காளை மாட்டில் பால் கறப்பதற்கு ஒப்பாகும்.  உங்களுக்கு கருத்து சுதந்திரம் தருகிறேன் உங்கள் கருத்தை தயங்காமல் எனக்கு தெரிவியுங்கள் என தனது அலைபேசி எண்ணை தருகிறார். மாணவரகளின் திறனை வெளிக்கொணர வலியுறுத்துகிறார் தான் ஓர் அரசுப்பள்ளி மாணவர் என பெருமிதம் கொள்கிறார். இருமொழி புலமை பெற்றபோதும் தனித்தமிழ் நடையில் நயமாக பேசுகிறார். கடுகளவும் கட்டளை கணைகளை ஏவாமல் கனிவுடன் பேசுகிறார்.இந்நூற்றாண்டின் ஆகச் சிறந்த பண்பாளர் இவர் என்றால் அது மிகையாகாது.குறிப்பாக காமராசர் தந்தை பெரியார் பற்றிய பாடங்கள் பாடநூலில் இடம் பெற வேண்டும் என்ற தனது அவாவை அவர் வெளிப்படுத்தும் போதே அறிவார்ந்த சமூகத்தை அவர் விரும்புகிறார் எனத் தெரிகிறது.

இத்தகைய புகழ் கொண்ட ஓர் அபூர்வமான அதிகாரியின் அதிகாரம் பறிக்கப்படுவது அவமானம் , அவருக்கல்ல நமக்கு .ஆசிரியர் பணியிட மாற்றம்தான் காரணம் எனில் அது ஐயா அவர்களின் நேர்மைக்குச் சான்றாகும்.ஆளும் வர்க்கம் நாட்டு வளங்களை தங்கள் வீட்டு வளங்களாக்க முயல்கிறது என்பதையே காட்டுகிறது.உயர்நீநி மன்ற உத்தரவு மட்டும் இல்லையெனில் அவர் வேறு துறைக்கு பந்தாடப்பட்டிருப்பார் . சுயமரியாதை உள்ள தமிழன் தன் சுயத்தை இழந்து நிற்கிறார். பல கோடி ஊழல் மலிந்து கிடக்கும் கல்வித்துத்துறையை சுத்தப்படுத்த வந்த மகான் இன்று நிர்கதியாக நிற்கிறார் . இத்திய வரலாற்றில் ஒரு IAS அதிகாரியை மாற்றக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிகழ்வு இதுதான் . நீதிமன்றம் தலையிட்டும் அநீதி இழைத்தவர்களுக்கு  மக்கள் மன்றத்தில் பதிலடி கொடுப்போம்.




8 Comments:

  1. ஆயிரம் கைகள் மறைத்தாலும் அறிவு சுடரை மறைக்க முடியாது. தங்கம் எங்கிருந்தாலும் தங்கம்தான்

    ReplyDelete
    Replies
    1. Why not additional school educational minister appointed?

      Delete
  2. Already a useless

    ReplyDelete
  3. Arivali entru ninaithu 2017 tet trb(bg) eppothum ellathathu pola migaum kadinamana qes eaduka solli palar kanavinai job kidaikamal seithavar everruku eraivan kodutha parisu.....

    ReplyDelete
  4. a ball with fully air covered it will come out if you submerged beneath the water . so he will over come everything


    ReplyDelete
  5. loss for School Education .loss for Truth.loss for Education system.During short period He made lot for SChool Education and Teachers.Thank u Uday Sir

    ReplyDelete
  6. our teacher's community always support to real father of education mr udhaichandran sir avarkalulku.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive