சம்பளம் பெறும் ஊழியர்கள், பி.எப்., நிலவரம் அறியவும், தொகை பெறவும்,
'ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் எளிமைப்
படுத்தப்பட்டுள்ளன.
மாத சம்பளம் பெறும் ஊழியர்களிடம், பி.எப்., தொகை
பிடித்தம் செய்யப்பட்டு, சேமிக்கப்படுகிறது. இதில், 4.5 கோடி சந்தாதாரர்கள், 45 லட்சம் ஓய்வூதியர்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்த
சேமிப்பு கணக்கு விபரங்கள், முந்தைய ஆண்டு செலுத்திய தொகை, அதற்கான வட்டி
மற்றும் இருப்பு விபரங்கள் ஆகியவை, ஊழியர்களுக்கு, நிறுவனம் மூலம், பிப்.,
மாதம் வழங்கப்படும்.
தற்போது, 'இ--கவர்னன்ஸ்' முறையில், எளிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு
உள்ளன. 'ஆன்ட்ராய்டு' போன் மூலம், இ.பி.எப்.ஓ., என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் இணையதளத்தில் நுழைந்தால், சந்தாதாரருக்கு வழங்கப்பட்டுள்ள,
யு.எ.என்., எண் மூலம் தங்கள் வைப்பு நிதி பாஸ் புக்கை காணலாம். கடைசியாக
செலுத்தப்பட்ட, பி.எப்., தொகை மற்றும் இருப்பு தொகை விபரங்களையும் பெற
முடியும்.தற்போது, பி.எப்., தொகை திரும்ப பெறுதல் மற்றும் கடன் பெற, இந்த
செயலி வழியாக விண்ணப்பிக்கும் வகையில், நடைமுறை
எளிதாக்கப்பட்டுள்ளது. இதனால், இதில் இணைந்துள்ள ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...