கோவை: ''எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு வகுப்புகள் துவங்குவதில் தாமதம்
ஏற்பட்டுள்ளதால், கூடுதல் வகுப்புகளை நடத்த தேவை இருக்காது,'' என, மருத்துவ
கல்வி இயக்குனர் எட்வின் ஜோ தெரிவித்தார்.
'நீட்' தேர்வு குழப்பத்தால், தமிழகத்தில் மருத்துவ சேர்க்கைக்கான,
கலந்தாய்வு நடவடிக்கைகள் இந்தாண்டு தாமதமாகின. வழக்கமாக, மருத்துவ
மாணவர்களுக்கு, ஆக., முதல் வாரத்தில், முதலாமாண்டு வகுப்புகள் துவங்கும்.
ஆனால், தற்போது வரை மாணவர் சேர்க்கை முடியவில்லை. இதனால், நடப்பாண்டில்
முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துவதில் சிரமம்
ஏற்படும் என, தெரிவிக்கப்பட்டது.
மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறியதாவது: கலந்தாய்வு நடந்து,
உடனடியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படும். உச்ச நீதிமன்றம், 31க்குள்
கவுன்சிலிங்கை முடித்து, செப்., 1 முதல் வகுப்புகளை நடத்த
உத்தரவிட்டுள்ளது. நடப்பாண்டில் முதலாம் ஆண்டு, எம்.பி.பி.எஸ்.,
மாணவர்களுக்கு உடற்கூறியல், தலை மற்றும் கழுத்து, நரம்பு மண்டலம் ஆகிய
பாடங்களுக்கு செய்முறை மற்றும், 'தியரி' வகுப்புகளுக்கு, 650 மணி நேரம்
ஒதுக்கப்பட்டுள்ளது.
கோர்ட் உத்தரவால், வகுப்புகள், 4ம் தேதி முதல் துவங்கும். இதை ஒப்பிட்டு
பார்க்கும்போது, கூடுதல் வகுப்புகளுக்கு தேவையிருக்காது. மாணவர்களுக்கான
வகுப்புகளுக்கு போதுமான அளவு கால அவகாசம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...