Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குறையும் எம்.பி.ஏ. ஆர்வம்!

தமிழகத்தில் இந்த ஆண்டு எம்.பி.ஏ. படிப்புக்கான இடங்களில் 65 சதவிகிதம் வரை காலியாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

எம்.பி.ஏ. எனப்படும் மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அதிக வரவேற்பு இருந்தது. எம்.பி.ஏ. படித்தால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுவதுடன் அதிக சம்பளமும் வழங்கப்படுவதே இதற்குக் காரணம். பொது நுழைவுத் தேர்வு (டென்சேட்) நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் எம்.பி.ஏ. எம்.சி.ஏ. போன்ற முதுநிலை பட்ட மேற்படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் அதிக அளவு விண்ணப்பிப்பார்கள்.

ஆனால் இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. பெரிதாக வேலைவாய்ப்பு கிடைக்காததால் எம்.பி.ஏ படிப்பில் சேரும் ஆர்வம் மாணவர்களிடையே குறைய தொடங்கியுள்ளது. நேற்று (ஆகஸ்ட் 1) இந்தப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. அதில், பெரும்பான்மையானவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 13,710 ஆக உள்ளது. இதற்கு வெறும் 4700 பேரே விண்ணப்பித்துள்ளனர். இதனால் கலந்தாய்வு முடிவதற்கு முன்பே 9 ஆயிரம் அல்லது 65 சதவிகித இடங்கள் காலியாக இருக்கப் போகிறது என்பது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 317 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 13,710 எம்.பி.ஏ. இடங்கள் உள்ளன. முதல் நாள் கலந்தாய்வில் மட்டும் 101 பேர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் எம்.சி.ஏ. படிப்புக்கும் மாணவர்களிடையே ஆர்வம் குறைந்துள்ளது. மொத்தமுள்ள 12 ஆயிரம் இடங்களில் 784 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.

வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்பது ஒரு காரணமாக கூறப்பட்டாலும் டென்செட் தேர்வுவை பெரும்பான்மை மாணவர்கள் எழுதுவதில்லை என்பது மற்றொரு காரணமாக உள்ளது. இந்தத் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததால் பலர் எழுதுவதைத் தவிர்த்தனர். இதையடுத்து தேர்வு முறையில் தளர்வு ஏற்படுத்தப்பட்டது. எனினும் 120 நிமிடங்களில் 100 கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்பதால் பலர் இத்தேர்வைப் புறக்கணிக்கின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive