சென்னை: பி.ஆர்க்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நாளை நடக்கிறது.
அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, 49 ஆர்கிடெக்சர் கல்லுாரிகளில், 2,043 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர, 1,777 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களின் தகுதியானவர்களுக்கு, நாளை கவுன்சிலிங்
நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு, மாற்று திறனாளிகளுக்கு இடங்கள்
ஒதுக்கப்படும். 8:30 மணிக்கு, 276, 'கட் - ஆப்' மதிப்பெண்
பெற்றவர்களுக்கும், 10:00 மணிக்கு, 257; 11:30 மணிக்கு, 236 'கட் - ஆப்'
பெற்றவர்களுக்கும், 1:00 மணிக்கு, மற்ற தகுதியான மாணவர்களுக்கும், இடங்கள்
ஒதுக்கப்படுகின்றன. அதே போல், 'பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற
மாணவர்களுக்காக, நாளை மாலை, 4:00 மணிக்கு துணை கவுன்சிலிங் நடக்கிறது.
இதற்கு, உரிய சான்றிதழ்களுடன் நேரில் அண்ணா பல்கலை வர வேண்டும்' என, மாணவர்
சேர்க்கை செயலர், இந்துமதி தெரிவித்துள்ளார். இதனிடையே, நிர்வாக
ஒதுக்கீட்டில் சேர்வதற்கான தமிழக அரசின், 'நாட்டா' தேர்வு முடிவு, இன்று
வெளியாகிறது. தேர்வர்கள், /www.annauniv.edu/tanata2017 என்ற இணையதளத்தில்,
முடிவை தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழை, ஆன்லைனில் நாளை
பதிவிறக்கம் செய்யலாம் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...