தத்கல் முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் தற்போது புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, முதலில் முன்பதிவு செய்யலாம்; பிறகு பணம் செலுத்தலாம்.
பொது பெட்டிகளுக்கு...
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இணைய தளத்தில் ரயில் டிக்கெட்களுக்கு முன்பதிவு செய்ய முடியும். இதுவரை பொது பெட்டிகளுக்கு முன்பதிவு செய்யும் போது தான் முதலில் முன்பதிவு; பிறகு பணம் செலுத்தலாம் என்ற நடைமுறை இருந்தது. தற்போது இந்த நடைமுறை தத்கல் முறையில் முன்பதிவு செய்யும் போதும் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், 'டோர் டெலிவிரி' எனப்படும் முறையில் தத்தல் நடைமுறையில் டிக்கெட்டுக்கு முன்பதிவு செய்யும் போது, டெபிட் கார்டு, கிரெடிட் கார்ட் அல்லது இ - பேங்கிங் வசதி மூலம் பணம் செலுத்த வேண்டும். இனிமேல், 'டோர் டெலிவிரி' செய்யப்பட்ட பிறகு பணம் செலுத்தினால் போதும்.
இணைய தளம் மூலம் பணம் செலுத்தும் போது சில நேரங்களில் டிக்கெட் கிடைக்காமல் போய் இருக்கும் போன்று பல பிரச்னைகள் ஏற்படும். கட்டிய பணத்தை திரும்ப பெற, ஏழு நாள் முதல், 15 நாட்கள் வரை ஆகும். இனிமேல், இப்பிரச்னைக்கு வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியை பெற சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
1. irctc.payondelivery.co.in என்ற இணைய தளத்தில் முதலில் பதிவு செய்ய வேண்டும். அப்போது ஆதார் அல்லது பான் கார்டு விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
2. ஐ.ஆர்.சி.டி.சி., இணைய தளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, ' பே ஆன் டெலிவிரி' என்ற வசதியை தேர்வு செய்ய வேண்டும்.
3. டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டதற்கான தகவல் எஸ்.எம்.எஸ்., அல்லது இ மெயில் மூலம் கிடைக்கும். அடுத்த 24 மணி நேரத்தில் டிக்கெட்டிற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
4. முன்பதிவு செய்யும் போது ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதற்கான, 'லிங்க்' அனுப்பப்படும். இந்த முறையிலும் பணம் செலுத்தலாம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...