டெல்லி: நீட் தேர்வு அடிப்படையில் எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் நாளை
வெளியிடப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நீட் தேர்விலிருந்து ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என
மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததால், தமிழகத்தில் நீட் தேர்வு
அடிப்படையில் உடனடியாக மருத்துவ கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் மருத்துவ கலந்தாய்வை
நடத்தி முடிக்கவும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் காலஅவகாசம்
வழங்கியுள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நாளை பிற்பகல்
தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ள தமிழக அரசு, நாளை
மறுநாள் முதல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கும் எனவும்
தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் நடைபெறும் என்றார்.
நாளை மறுநாள் மாற்றுத் திறனாளிகளுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்றும், பல்
மருத்துவப் படிப்பில் சேர செப்.10 வரை கலந்தாய்வு நடைபெறும் என்றும் அவர்
கூறியுள்ளார். தமிழகத்தில் 3,536 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளது என
ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...