இந்திய தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்கள் இந்த ஆண்டில் 10 சதவிகித வருவாய்
இழப்பைச் சந்திக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ஸ்டேன்டர்டு & பூவர் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய தொலைத் தொடர்புத் துறையில் நிறுவனங்கள் இணைப்பு நடவடிக்கையை நாங்கள் எதிர்பார்க்கிறோம். வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைந்து மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமாக உருவெடுக்கும். இந்நிறுவனமும், ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து இந்திய தொலைத் தொடர்புச் சந்தையின் சுமார் 85 சதவிகிதப் பங்குகளைக் கொண்டிருக்கும். தற்போதைய நிலையில் சந்தைப் பங்கு மற்றும் வாடிக்கையாளர்களைக் கைப்பற்றுவதற்காக கடுமையான போட்டி நிலவி வருகிறது. அனைத்து நிறுவனங்களும் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு கட்டணக் குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த ஆண்டின் இறுதியில் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் சந்தையில் புதிதாக இணைந்த பிறகு போட்டி வலுத்துள்ளது. மேலும் பிற நிறுவனங்களின் வருவாய் சரிவடையத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு 10 சதவிகிதம் வரையில் வருவாய் இழப்பு ஏற்படும். தொலைத் தொடர்புத் துறையில் மீண்டும் இயல்பு நிலை திரும்புவதற்கு 12 முதல் 24 மாதங்கள் வரை ஆகலாம். ஜியோவின் வருகையானது பிற நிறுவனங்களை கட்டணக் குறைப்புக்கு ஆழ்த்தியுள்ளது. இதனால் வருவாய் இழப்பும் நீடித்து வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...