பல்கலை மற்றும் கல்லுாரிகளில், புகார் பெட்டி வைத்து, ஆசிரியர்கள் மற்றும்
மாணவர்களின் குறைகளை தீர்க்குமாறு, துணைவேந்தர்களுக்கு, மத்திய பல்கலை
மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.
கல்லுாரிகள் மற்றும்
பல்கலைகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பிரச்னை தொடர்பாக,
யு.ஜி.சி.,க்கு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
பல பல்கலைகளில், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பில் முறைகேடு நடப்பதாகவும்,
வழிகாட்டி ஆசிரியர்களால், சில ஆராய்ச்சி மாணவர்கள், தேவையற்ற
அலைக்கழிப்புக்கு ஆளாவதாகவும் புகார்கள் உள்ளன.உள்கட்டமைப்பு பிரச்னை;
வகுப்புக்கு வராமல் பேராசிரியர்கள், 'ஓபி' அடிப்பது; மாணவர்களை பிரித்து
வைத்து பாரபட்சம் காட்டுவது; அதிக கல்வி கட்டணம், நன்கொடை வசூலிப்பது
போன்ற, பல புகார்கள் எழுந்துள்ளன.இந்நிலையில், மாணவர்கள், ஆசிரியர்களின்
குறைகளுக்கு, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் தீர்வு காண, யு.ஜி.சி.,
அறிவுறுத்தி உள்ளது.
பல்கலைகளின் துணைவேந்தர்கள், பதிவாளர், துறை தலைவர்கள், கல்லுாரிகளின்
முதல்வர்கள் போன்றோர், தங்கள் அலுவலகத்திற்கு வெளியில், புகார் பெட்டி
வைத்து, குறைகளை கடிதமாக பெற வேண்டும்
புகார்கள் மீது, உரிய முறையில், புகார்தாரருக்கு பாதிப்பு ஏற்படாத
வகையில், தீர்வு காண வேண்டும். இதனால், யு.ஜி.சி., மற்றும் மத்திய பணியாளர்
நிர்வாகத் துறைக்கான கூடுதல் பளு குறையும்
குறை தீர்வு குறித்த பட்டியலை, அவ்வப்போது தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...