''மாணவர்களுக்கு பயனளிக்கக் கூடியது, 'நீட்' தேர்வு,'' என, மாநில
அளவில் வெளியிடப்பட்ட மருத்துவப் படிப்புக்கான தர வரிசை பட்டியலில் சாதித்த
கோவை மாணவர், பெருமிதம் தெரிவித்தார்.
'நீட்' தேர்வு அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கானதரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
'நீட்' தேர்வு அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கானதரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
பயிற்சி : இதில், கோவை மாணவர் முகேஷ் கண்ணா, 655 மதிப்பெண் பெற்று, மாநில
அளவில் இரண்டாம் இடம் பிடித்தார். மாணவர் முகேஷ்கண்ணா கூறியதாவது:கடந்த,
2015ல், கோவை எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியில், மாநில கல்வி பாடத்திட்டத்தில்
பயின்று, 1,165 மதிப்பெண் பெற்றேன். 193.5, 'கட்-ஆப்' கிடைத்தது. ஆனால்,
மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைக்காததால், இன்ஜி., படிப்பில்
சேர்ந்தேன்.'நீட் தேர்வு கட்டாயம் அமல்படுத்தப்பட வேண்டும்' என, கடந்தாண்டு
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், படிப்பை பாதியில் கைவிட்டு, நீட்
தேர்வுக்காக பயிற்சி எடுத்தேன்.
தற்போது, மாநில அளவில், இரண்டாவது இடமும், அகில இந்திய அளவில், 260வது
இடமும் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. அகில இந்திய ஒதுக்கீட்டின் படி, கோவை,
அரசு மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்து உள்ளது.நீட் தேர்வுக்கான
பாடத்திட்டங்களை முறையாக பயில்வதும், கடின உழைப்பும், தேர்வில் வெற்றி பெற
வைக்கும். 2006ம் ஆண்டு வரை, தமிழகத்தில் நுழைவுத் தேர்வு முறையே
பின்பற்றப்பட்டது. கடந்த, 10 ஆண்டுகளாக தான், 'கட்-ஆப்' முறை
பின்பற்றப்படுகிறது. நீட் தேர்வை பொறுத்தவரை, மூன்று வாய்ப்புகள்
வழங்கப்படுகின்றன. ஏதாவது ஒரு வாய்ப்பில் மருத்துவப் படிப்புக்கான இடத்தை
பெற்று விடலாம். இத்தேர்வு, மாணவர்களுக்கு மிகவும் பயன்அளிக்கக் கூடியது.
மாநில ஒதுக்கீடு : அகில இந்திய அளவில், போட்டி தேர்வில் பங்கேற்பதால், அகில
இந்திய ஒதுக்கீட்டிலும் தேர்வாகலாம்; மாநில ஒதுக்கீட்டிலும் இடம் பிடிக்க
முடியும்.
இதனால், முதல் தர மருத்துவக் கல்லுாரிகளில் சேர முடியும். நம் மாணவர்கள்
நன்கு படித்தால், பிற மாநில மாணவர்களுக்கு சவால் விட முடியும். இவ்வாறு,
அவர் கூறினார்.இவரது தந்தை, மணிகண்டன், சுயதொழிலில் ஈடுபட்டுள்ளார். தாய்
கீதா, மாநகராட்சி பள்ளி ஆசிரியை.
Good morning teachers
ReplyDeleteDuring probation period if we take maternity leave, probation Will be postponed or probation Will be declared in actual date.
If any orders are there send to me
Good morning.probation periodil edhutha C.L,R.L, thavira matra anaithu leave m serthu probation thallipohum.
ReplyDelete