தமிழக அரசு ஊழியர்கள் இன்று (22-ம் தேதி) ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள வேலைநிறுத்தம் போராட்டத்தை
அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக, காங்கிரஸ் கட்சி
துணைநிற்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்
சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
"மத்திய அரசு அறிவித்துள்ள 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் பழைய
ஓய்வு திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு ஊழியர் மற்றும்
ஆசிரியர்களுக்கும், உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென்று 22-ம் தேதி ( இன்று)
ஒரு நாள் வேலைநிறுத்தம் நடத்துகிறார்கள். இவர்களின் ஒருநாள் அடையாள வேலை
நிறுத்த போராட்டத்தை முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி அடக்க, ஒடுக்க
நினைக்காமல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரதிநிதிகளை
அழைத்துப்பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற
வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்தும் நியாமான போராட்டதிற்கு
தமிழநாடு காங்கிரஸ் கட்சி என்றும் துணை நிற்கும் என்பதையும்
இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என்பதையும்
தெரிவித்துக்கொள்கிறேன்"
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...