மதுரையில் தேர்வு எழுதியவர்கள் கூறியதாவது:
ஜி.பிரவீணா: வினாக்கள் எளிதாக இருந்தன. பொதுஅறிவு வினாக்கள் சற்று கடினம்.
ஆங்கில வினாக்கள் மிக எளிமை. உலகநடப்பு, அரசியல், பொதுஅறிவு வினாக்கள்
எளிதாக இருந்தன.
எம்.சரண்யா: அரசியலமைப்பு சட்டம் குறித்த வினாக்கள் அதிகம் இடம்
பெற்றிருந்தன. அரசியல் அறிவியல் படித்திருந்தால் விடை அளிப்பது எளிது.
முந்தைய டி.என்.பி.எஸ்.சி., வினாக்கள் அடிப்படையில் தேர்வுக்கு தயாரானேன்.
எஸ்.அனின்கா : ஆங்கில வினாக்கள் எளிதாக இருந்தன. அறிவியல் பாட வினாக்கள்
கடினம். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பாடங்களில் இருந்து, அதிக வினாக்கள்
இடம்பெற்றன.
ரென்சி: 'கடந்த லோக்சபா தேர்தலில்
பதிவான ஓட்டுக்கள்
எத்தனை சதவீதம்' என்பன போன்ற எண்கள் அடிப்படையில் விடையளிக்கும் விதத்தில்
வினாக்கள் இடம்பெற்றிருந்தன. கடந்த 10 ஆண்டு தேர்வுகளில் இடம்பெற்றிருந்த
வினாக்களை படித்தேன்; உதவியாக இருந்தது.
லிங்சி: சமச்சீர் கல்வி புத்தகத்தை அதிகம் படித்ததால், தேர்வு எளிதாக
இருந்தது. அனைத்து பாடங்களுக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.
ஆஷ்னா: ஆங்கில பாட வினாக்கள் எளிது. சட்டவிதிகள் சார்ந்த வினாக்கள் சற்று கடினமாகவே இருந்தன.
இவ்வாறு கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...