Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இந்தியர்களின் விவரங்களை சீனாவிற்கு அனுப்பும் யூசி ப்ரவுஸர்!

    இந்தியாவில் மிகவும் பிரபலமான மொபைல் ப்ரவுஸராக யூசி ப்ரவுஸர் திகழ்கிறது.
      அப்படியான யூசி ப்ரவுஸர் மீது இந்தியா அரசாங்கம் ஒரு நம்பமுடியாத குற்றசாட்டை சுமத்தியுள்ளது. அதாவது, இந்திய பயனாளர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளை, யூசி ப்ரவுஸர் இதர நாடுகளுக்கு அனுப்புவதாய் குற்றம் சாட்டப்பட்டு கண்காணிப்புக்குள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அலிபாபா நிறுவனத்திற்கு சொந்தமான யூசி ப்ரவுஸர் ஆனது, பயனர் விவரங்கள் மற்றும் இருப்பிடத் தரவுகளை ஒரு ரிமோட் சர்வருக்கு அனுப்புவது சார்ந்த ஆய்வை ஹைதராபாத்தில் உள்ள ஒரு அரசு ஆய்வகம் நிகழ்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையமானது (C-DAC - மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை) "அலிபாபாவிற்கு சொந்தமான யூசி ப்ராப்ரவுஸர் மீதுள்ள குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டால், அது தடை செய்யப்படலாம். ஆனால் தடை செய்வது தேவைதானா என்பதை இந்த கட்டத்தில் தெளிவாக கூறமுடியாது" என்று கருத்து தெரிவித்துள்ளதாக இன்னொரு அறிக்கை கூறியுள்ளது. வெளியான தகவல்களின்படி, யூசி பரவுஸர் ஆனது வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்கப்படும் சாதனங்களின் ஐஎம்இஐ (IMEI) எண் மற்றும் லோக்கேஷன் டேட்டா போன்ற உள்ளடக்கிய தரவுகளை சீனாவின் சேவையகத்திற்கு அனுப்புகிறது என்று கூறப்படுகிறது.

 ஒரு கனடிய தொழில்நுட்ப ஆராய்ச்சிக்குவானது "கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதத்தில் - அலிபாபா க்ரூப் ஹோல்டிங் லிமிடெட் ஆனது முக்கியமான பயனர் தரவை கசியவிட்டதற்காக 1 மில்லியன் டாலருக்கும் மேலாக செலுத்தியாகவும், அது ஒரு தனியுரிமை ஆபத்து" என்று கூறியுள்ளது. சீனம் மற்றும் ஆங்கில மொழிகள் கொண்ட யூசி ப்ரவுஸர் பதிப்புகள், பயனர்களின் இடம், தேடல் விவரங்கள், மொபைல் சந்தாதாரர், சாதன எண்கள் போன்ற அடையாளம் காணக்கூடிய தரவுகளை மூன்றாம் தரப்பினருக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் எளிமையாக அனுப்பி வைக்கும் என்கிறது சிட்டிசன் லேப். கடந்த வாரம், பெரும்பாலான சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் உட்பட அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதிப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் செயல்முறைகளை முன்வைக்கும்படி அரசாங்கம் கேட்டுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. மொபைல் உற்பத்தியாளர்களும், மென்பொருள் வழங்குநர்களும் பயனர்களை கண்காணிப்பதற்கான ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளனர். அது வெளிப்படும்போது சேகரிக்கப்பட்ட தரவின் அளவு நாம் கற்பனைகூட செய்து பார்க்கமுடியாத அளவு இருக்கும். இதற்கு யூசி ப்ரவுஸர் விதிவிலக்காக இருக்காது. ஸ்டாட்வுண்ட் ஆய்வகத்தின் படி, யூசி ப்ரவுஸர் - இந்தியாவில் மிகவும் பிரபலமான மொபைல் உலாவியாகும், இது சந்தையில் 50 சதவிகித பங்கைக் கொண்டுள்ளது, க்ரோம் மற்றும் ஓபெரா ப்ரவுஸர்களை பின்தள்ளி பட்டியலில் நிலைத்திருக்கிறது. அதன் உச்சத்தில், யூசி ப்ரவுஸர் இந்திய சந்தையில் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் பங்கை பெற்றது. அதன்பின்னர் கூகுள் நிறுவனத்தின் க்ரோம் ப்ரவுஸரிடம் சில இடங்களை இழந்துள்ளது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதட்டங்கள் உயர்ந்த மட்டத்தில் இருக்கும் இந்நிலைபாட்டில், மற்ற நாட்டிற்கு அனுப்பும் எந்தவொரு இந்தியா சார்ந்த தகவலும், எந்த அளவிலான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கூறமுடியாது.

யூசி பிரவுசரை தடைசெய்யப் போகிறதா இந்திய அரசு?

சீனாவின் பிரபலமான மொபைல் மற்றும் வெப் பிரவுசர் நிறுவனங்களின் ஒன்றுதான் யூசி. இது அலிபாபா நிறுவனத்தின் ஒரு கிளை. இந்தியாவில் கூகுள் குரோம்-க்கு அடுத்தபடியாக யூசி தான் அதிக அளவில் பயன்படுத்தப்படும் பிரவுசர். மொபைல் பிரவுசர்களில் முதல் இடத்திலும் தற்போது யூசி தான் உள்ளது.

இந்த பிரவுசரின் வழியாக தனிமனிதர்களின் விவரங்கள் சீனாவின் செர்வர்களுக்கு கடத்தப்படுவதாக சில தகவல்கள் வெளியாகின. இது உண்மை என நிரூபிக்கப்படும் பட்சத்தில் யூசி பிரவுசர் இந்தியாவில் இருந்து முற்றிலுமாக தடை செய்யப்படலாம்.

முதலில் இதுகுறித்து டொரொண்டோ பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை ஆய்விற்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, பின்னர் மத்திய அமைச்சகம் தீவிரமாக இந்த விவகாரத்தில் இறங்கியுள்ளது.

‘மொபைல் பயன்பாட்டாளர்கள் தங்களது மொபைலில் யூசி பிரவுசரை நீக்கினாலும், பிரவுசர் வரலாறுகளை அவ்வப்போது நீக்கி வந்தாலும் கூட பல ரகசிய தகவல்கள் சீனாவின் செர்வர்களுக்கு கடத்தப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது. இது உறுதிசெய்யப்பட்டால் யூசி இந்தியாவில் இருந்து தடை செய்யப்படலாம். இதுகுறித்து யூசி நிறுவனத்திற்கும் தெரியப்படுத்தி இருக்கிறோம்’ என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரி ஆங்கில ஊடகத்திற்கு பதிலளித்துள்ளார்.

இதனை யூசி செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். மேலும், பயன்பாட்டாளர்களின் தகவல்கள் பாதுகாப்பாகவும் அதே சமயம் ரகசியத்தன்மை இழக்காமல் இருப்பதற்காகவும் மெனக்கெடுகிறோம். ஒவ்வொரு தகவலும் என்கிரிப்ட் செய்யப்பட்ட பின்னே செர்வருக்கு அனுப்பப்படுகிறது. இந்த விஷயத்தில் நாங்கள் உள்நாட்டு சட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றுகிறோம் என தெரிவித்துள்ளார்.

யூசி இந்திய அளவில் 100 மில்லியன் மற்றும் உலக அளவில் 450 மில்லியன் மாதாந்திர பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive